சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா): ஆரி மற்றும் சீக்ரெட் ஆஃப் சீசன்ஸ், ஃபிக்மென்ட், எஃப் 1 - 2020, ஹாட்லைன் மியாமி ஆகிய விளையாட்டுகளை அடுத்தாண்டு(2021) ஜனவரியில் கூகுள் தனது ஸ்டேடியா விளையாட்டுத் தளத்தில் வெளியிடவுள்ளதாக, 9To5 கூகுள் இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய மதிப்பில் ஃபிக்மென்ட் விளையாட மாதம் சுமார் ரூ. 1,400 செலுத்தவேண்டும். எஃப் 1 2020 சுமார் ரூ. 4,400க்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 30 இணைய விளையாட்டுகள் கொண்ட தொகுப்பினை மாதம் சுமார் 740 ரூபாய்க்குப் பெற முடியும் என்று அறிக்கையில் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது
-
Stadia Changelog: 4 new games, Embr Holiday Update, more https://t.co/9OcAnNrQ23 by @nexusben pic.twitter.com/t6cCEgFoxa
— 9to5Google.com (@9to5Google) December 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stadia Changelog: 4 new games, Embr Holiday Update, more https://t.co/9OcAnNrQ23 by @nexusben pic.twitter.com/t6cCEgFoxa
— 9to5Google.com (@9to5Google) December 25, 2020Stadia Changelog: 4 new games, Embr Holiday Update, more https://t.co/9OcAnNrQ23 by @nexusben pic.twitter.com/t6cCEgFoxa
— 9to5Google.com (@9to5Google) December 25, 2020
ஸ்டேடியாவில் விளையாட என்ன செய்ய வேண்டும்
- Stadia.com என்ற இணையதளத்தில் உள்நுழையவும்
- ஸ்டேடியா ஆண்ட்ராய்டு / ஐஓஎஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
- உள்நுழைய பதிவுசெய்துவிட்டு, விருப்பப்பட்ட விளையாட்டுகளுக்கான சந்தாவைச் செலுத்திவிட்டு, விளையாட தொடங்கவேண்டியது தான்.