சான் பிரான்சிஸ்கோ: உலகளவில் உள்ள பயனர்களுக்கு தங்களின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சமான எண்ட் - டூ - எண்ட் என்கிரிப்ஷனை ஜூம் செயலி நிறுவியுள்ளது.
புதிய பாதுகாப்பு அம்சத்தின் மூலம், ஜூம் செயலி மூலம் பயனர்கள் மேற்கொள்ளும் காணொலி சந்திப்புகளில், குறிப்பிட்ட பங்கேற்பாளரை தவிர வேறு யாரும்; அதாவது ஜூமின் சந்திப்பு சேவையகங்கள் கூட காணொலி நிகழ்வை அணுக இயலாது.
அனைத்து விதமான பயனர்களுக்கும் இந்த அம்சத்தினை ஜூம் வழங்கியுள்ள நிலையில், ஜூம் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் இந்த சேவை தற்காலிகமாக நிறுவப்படவில்லை. இதற்காக ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஒப்புதலுக்காக இந்த அம்சம் நிலுவையிலுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பயனர்களுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்:
- இணைய சந்திப்புகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
- நிறுவன ஊழியர்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்வுகளில், தேவையற்ற ஊடுருவல்கள் இருக்காது
- பயனர்கள் தங்கள் அமைப்புகளிலேயே (செட்டிங்க்ஸ்) தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள முடியும்.
- புதிய பாதுகாப்பான அம்சம் மூலம் மேற்கொள்ளும் காணொலி சந்திப்புகளில் 200 பங்கேற்பாளர்கள் வரை சேர அனுமதி