ETV Bharat / lifestyle

என்னது வாட்ஸ்அப் பாதுகாப்பு இல்லையா... புதிய கொள்கையால் பாதையை மாற்றும் பயனர்கள்! - cyber crime expert karthigeyan

வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் கொள்கையில் கொண்டு வந்த மாற்றத்திற்கு, எலான் மஸ்க் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்
author img

By

Published : Jan 9, 2021, 6:23 AM IST

உலகம் முழுவதும் இணையவழி தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் செயலி 200 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களால் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி, வாடிகையாளர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமான இலவச வாய்ஸ் கால், வீடியோ கால் வசதி இளைஞர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளும் குறுந்தகவல்கள், தொலைபேசி அழைப்புகள் மிகவும் பாதுகாப்பானது எனவும், தனிநபர் தகவல்களை வாட்ஸ்அப் நிறுவனத்தால் கூட பெற முடியாதபடி இருந்து வருகிறது

தனிநபர் தரவில் மாற்றம்

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் தனிநபர் தகவல் பரிமாற்ற கொள்கையில் சில மாற்றங்களை அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் மேற்கொண்டுள்ளது. இதனால், பயனர்கள் தொலைபேசி எண்கள், இருப்பிடங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளை பேஸ்புக்கோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தரவுகளை பேஸ்புக், தனது விளம்பரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் எனவும் தெரிகிறது. பிப்ரவரி 8, 2021 தேதிக்குள் இதை ஒப்புக்கொள்ளாதவர்களை வெளியேற்றும் முயற்சியில் பேஸ்புக் இறங்கியுள்ளது.

இதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு ஒப்புதல் அளிப்பது, தனிநபர் தகவல்களை நாமே முன்வந்து தருவதற்கு ஒப்பாகும் என இணைய பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகின்றனர். தனிநபரின் மொபைல் மாடல், பேட்டரி எண், சிக்னல், வங்கி கணக்கு எண், குறுஞ்செய்தி தகவல்கள் என அனைத்தையும் வாட்ஸ்அப் நிறுவனம் கண்காணிக்கும் எனக் கூறப்படுகிறது.

சைபர் கிரைம் அலுவலர் கார்த்திகேயன்

இதுகுறித்து பேசிய சைபர் கிரைம் அலுவலர் கார்த்திகேயன் , "பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே இது போன்ற தனிநபர் தகவல் பரிமாற்றக் கொள்கை கண்காணித்து வருகிறது. இதற்கு ஒப்புகொள்பவர்கள் மட்டுமே தொடர்ந்து அந்த நிறுவன செயலியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

வேறு விதமான செயலிகளை உபயோகப்படுத்தினாலும் இதற்கு கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதைத் தவிர்க்க முடியாது எனவும் தனிநபர் தகவல்களை கூகுள் மெயில் உள்ளிட்டவை மூலம் அனுப்பி பயன்பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய விதிமுறை மாற்றத்தை டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலான் மஸ்க் உள்பட பலர் விமர்சித்து வருகின்றனர். டெலிகிராம், ஹைக், சிக்னல் செயலிகள் பக்கம் பயனர்கள் தங்களது கவனத்தை திருப்ப தொடங்கியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.