வாட்ஸ்ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. முகநூல் மூலம் தகவல்கள் திருடப்பட்டு வருகின்றது என்று அவ்வப்போது, தகவல்கள் வெளியானாலும் பயனர்கள் அதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் அதிகளவில் இருக்கின்றனர். இதன் மூலம் பல்வேறு சேவைகளுக்கும் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
![வாட்ஸ்ஆப் எந்த லாபமும் இல்லை மார்க் ஜூகர்பெர்க் முகநூல் no profit in whatsapp mark zuckerberg](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3132135_mark.jpg)
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களிடம் மார்க் ஜூகர்பெர்க் கான்ஃபரென்ஸ் வாயிலாக உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் சமூக ஊடகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகவும், இது அமெரிக்க சந்தைக்கு கடும் சவால் விடும் வகையில் உள்ளதாகவும் கூறினார். மேலும், வாட்ஸ்அப் செயலியால் லாபமும் கிடைப்பதில்லை என குறிப்பிட்ட அவர், இதனால் ஃபேஸ்புக் வருமானமும் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.