ETV Bharat / lifestyle

அப்பாடா! கடைசியா வந்திருச்சு... வாட்ஸ்அப் புது அப்டேட் - WhatsApp new iphone update

நீண்ட காலமாகப் பயனாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு வசதியை வாட்ஸ்அப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

WhatsApp
author img

By

Published : Nov 3, 2019, 5:37 PM IST

பொதுவாக மொபைல் பயன்படுத்துவோர் மற்றவர்களிடம் மொபைலைத் தரத் தயக்கம் காட்டுவார்கள். அதற்கு முக்கிய காரணமே, வாட்ஸ்அப், மெசென்ஜர் போன்ற சாட்டிங் தளங்களில் நமது சாட்டிங்கை பிறர் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில்தான்.

இந்நிலையில், ஆண்டராய்டு மொபைல்களுக்கு சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் அப்டேட் மிக முக்கிய வசதியை வழங்கியுள்ளது. அதன்படி இனிமேல் வாட்ஸ்அப் செயலியைப் பயனாளர் கைரேகையின்றி வேறுயாராலும் திறக்கமுடியாது. இந்த புது பிங்கர்பிரின்ட் சென்சார் வசதி முன்னரே சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தாலும் இப்போதுதான் அனைத்து பயனாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வசதி ஐபோன் வைத்திருப்பவர்களுக்குக் கடந்த பிப்ரவரி மாதமே வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப்-இல் நேரடியாகப் பார்க்கமுடியும். இப்போது ஐபோன்களுக்கு வெளியிடப்பட்டுள்ள 2.19.311 என்ற வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டில் நெட்ஃப்ளிக்ஸ் டிரைலர்களை நேரடியாகப் பார்க்கும் வசதியையும் டார்க் மோட் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் பயனர்களைக் குறிவைக்கும் இஸ்ரேல் ஹேக்கர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.