பிரசாத் தாஸ் எனும் ஐடி ஊழியர் (36) ஒருவர் லண்டனில் தீரா வியாதியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவரின் சொந்த ஊர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் தலசேரியாகும். அவரை அவரது சொந்த மாநிலத்திற்கு கொண்டு வர குடும்பத்தினர் முயற்சியை மேற்கொண்டனர். அதற்கு டெல்லியில் கேரள ஐடி ஊழியர்களால் சேவை நிமித்தமாக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் குழு உதவி செய்தது.
அந்த வாட்ஸ் அப் குழுவை ஒருங்கிணைத்தவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப். இவர்களின் முயற்சியைத் தொடர்ந்து ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அதன் மூலம் நேற்று அவசர விமான சேவை மூலம் ஜெர்மனி, கிரீஸ், ஷார்ஜா ஆகிய நாடுகள் வழியாக நோயால் பாதிக்கப்பட்ட பிரசாத், அவரது மனைவியுடன் அழைத்து வரப்பட்டார்.
உ.பி.,யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சந்தேக மரணம்...!
அவர் வந்த விமானம் கோழிக்கோட்டின் கரிப்பூர் விமான நிலைய தளத்தில் தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்தான், லண்டனிலிருந்து வர அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெர்மனி, கிரீஸ், ஷார்ஜா ஆகிய நாடுகளின் விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப விமானம் தரையிறக்கப்பட்டது. இதற்கு அந்நாட்டு அரசுகள் இவ்வளவு எளிதில் அனுமதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.