டெல்லி: ட்விட்டர் நிறுவனம் தனது செயலியில் புதிய ‘ஃபிளீட்ஸ்’ எனும் அம்சத்தினை நிறுவியுள்ளது.
இதன்மூலம், பயனர்கள் பதிவிடும் ட்வீட்கள் 24 மணிநேரத்தில் அழிந்துவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு யாரும் பொதுவெளியில் பதில் கருத்து பதிவிட முடியாது எனவும் கூறியுள்ளது.
ஃபிளீட்ஸ் மூலம் பதியப்படும் ட்வீட்களுக்கு யாரேனும் மறுமொழி (reply) அனுப்பினால், அது தனி ட்விட்டர் குறுந்தகவலாக பதிவிட்ட பயனர்களுக்கே செல்லும். அதாவது பொது வெளியில் இந்த மறுகருத்துக்கள் பிரதிபலிக்கப்படாது.
அதுமட்டுமில்லாமல், இதனை வேறு நபர்கள் மறுட்வீட் (ரீட்வீட்) செய்யவும் இயலாது. பெரும் சமூக வலைதள நிறுவனங்கள் இதுபோன்ற அம்சத்தினை முன்னதாகவே தங்கள் செயலிகளில் நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சத்தை பிரேசில், இத்தாலி, இந்தியா, தென் கொரியாவில் ட்விட்டர் சோதனை செய்துவருகிறது.