பெய்ஜிங்: ஃபேஸ்புக் ஒரு திருட்டு நிறுவனம் என டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் விமர்சித்துள்ளது.
டிக்டாக் மீது புகார்கள் வரத் தொடங்கியதை அடுத்து ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் 'ரீல்ஸ்' எனும் குறும் காணொலி பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
டிக்டாக் செயலியை கையகப்படுத்தும் மைக்ரோசாஃப்ட்!
முன்னதாக 'லாசோ' எனும் தனி காணொலி பகிரும் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டது. ஆனால், அது மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்ததால் ஜூலை 10ஆம் தேதி, அதன் சேவை நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, டிக்டாக் தடை எதிரொலியாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் புகைப்படம் பகிரும் தளமான இன்ஸ்டாகிராமில், 'ரீல்ஸ்' எனும் வசதியை அறிமுகப்படுத்தியது. ஆனால், அதுவும் டிக்டாக் சேவையை அச்சு அசலாக கொண்டு வெளியிடப்பட்டது என்று துறைசார் வல்லுநர்கள் கூறி வந்தனர்.
டிக்டாக் செயலியை ஓரங்கட்டுமா ஃபேஸ்புக்கின் லஸ்ஸோ!
இதற்கிடையில், டிக்டாக் நிறுவனத்தின் தற்போதைய சூழல் கண்டு, உலக நாடுகள் தங்களுக்கு உரிமத்தை கொடுக்கும்படி தாய் நிறுவனமான பைட் டான்ஸ் உடன் ஒப்பந்தம் போட முனைப்புக் காட்டி வருகிறது.
அமெரிக்கா ஒருபடி மேல் சென்று, 'நிறுவனத்தைக் கொடுத்து விடுங்கள், இல்லையேல் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று மிரட்டி வருகிறது. இச்சூழலில் தற்போது தங்களின் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளது, பைட் டான்ஸ்.
'ஆம், எங்களை ஒடுக்க நினைக்கும் பெரு நிறுவனங்கள் வெளியிடும் செயலிகள் அனைத்தும், எங்கள் நிறுவனத்தின் செயலிகளை திருடி, அதன் அம்சங்களைக் கொண்டு வெளியிடப்பட்டவை.
குறிப்பாக, ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலியின் அம்சங்களை அச்சுஅசலாக திருடி செயலிகளை வடிவமைத்து வருகிறது' என பைட் டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.