வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனமாக டிக்டாக் செயல்பட்டால், அதன் மீதான தடைகளுக்கு அவசியமில்லை என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோ தெரிவித்துள்ளார்.
”சீனாவில் இயங்கும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தைத் துறந்து, அமெரிக்காவில் தலைமையகத்தை அமைத்து இங்கு செயல்பட்டால், டிக்டாக்கின் தனிப்பட்ட வளர்ச்சி இன்னும் மேலோங்கும். தனியுரிமை தகவல்கள் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தங்களின் சர்வர்களை இங்கு அமைக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும், சீனச் செயலிகள் தடை குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை எனவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.