ETV Bharat / lifestyle

ஆடியோ மெசேஜ் அனுப்பும் வசதி கூகுள் அசிஸ்டன்டில் அறிமுகம்!

டெல்லி : கூகுள் நிறுவனம் புதிய முயற்சியாக கூகுள் அசிஸ்டன்ட் மூலமாக ஆடியோ மெசேஜ் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள்
கூகுள்
author img

By

Published : Aug 19, 2020, 6:54 PM IST

உலக அளவில் பிரபலமான கூகுள் நிறுவனம், ஸ்மார்போன் பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், மக்களுக்கு நண்பனாகத் திகழும் கூகுள் அசிஸ்டன்டில் புதிய அப்டேட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, பயனர்கள் ”Hey Google, send an audio message to 'X', saying I'm on the way” என சொன்னால் போதும், கூகுள் அசிஸ்டன்ட் அடுத்த நொடியே உரிய நபருக்கு ஆடியோ செய்தியை அனுப்பி விடும். மேலும், இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாருக்கு வேண்டுமானாலும் போட்டோஸ் அல்லது பைஃல்ஸ் அனுப்பு முடியும்.

மேலும், இணையப் பக்கத்தில் உள்ளவற்றை படித்துக் காட்டும் திறமையும் கூகுள் அசிஸ்டன்டிடம் உள்ளது. பிரவுசரில் வரும் வலைப்பக்கத்தின் உள்ளடக்கத்தை படிக்க விரும்பினால் ஜஸ்ட் "Hey Google, read this page" எனச் சொன்னால் போதும், சத்தமாக படித்துக்காட்டத் தொடங்கி விடும்.

அதே போல், செல்பி புகைப்படம் எடுக்க விரும்புவோர் "Hey Google, take a selfie" எனச் சொன்னால் உடனடியாக செல்பி கேமிரா செயலியை ஆன் செய்து மூன்று நொடியில் படத்தை தெளிவாக கிளிக் செய்யும். சிலரின் அன்றாட வாழ்க்கையின் அங்காமாவே மாறியுள்ள கூகுள் அசிஸ்டன்டின் இந்தப் புதிய அப்டேட் அதன் பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.