கோவிட்- 19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 5,800க்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இருப்பினும் ஒருவருக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதை விரைவில் கண்டறிய உதவும் கருவிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் புனேவைச் சேர்ந்த ஃபாஸ்ட்சென்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், கரோனா வைரஸ் தொற்றை எளிதாகவும், விரைவாகவும் கண்டறிய உதவும் இரு கருவிகளை உருவாக்கியுள்ளது.
-
Rapid #diagnostic kit being developed by #Pune based #startup for #COVID19 #screening.@drharshvardhan @Ashutos61 @MoHFW_INDIA @COVIDNewsByMIB @IndiaDST @ICMRDELHI @PIB_India https://t.co/G9HT5sswnz pic.twitter.com/lVfFlNxqHP
— DSTIndia (@IndiaDST) April 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rapid #diagnostic kit being developed by #Pune based #startup for #COVID19 #screening.@drharshvardhan @Ashutos61 @MoHFW_INDIA @COVIDNewsByMIB @IndiaDST @ICMRDELHI @PIB_India https://t.co/G9HT5sswnz pic.twitter.com/lVfFlNxqHP
— DSTIndia (@IndiaDST) April 8, 2020Rapid #diagnostic kit being developed by #Pune based #startup for #COVID19 #screening.@drharshvardhan @Ashutos61 @MoHFW_INDIA @COVIDNewsByMIB @IndiaDST @ICMRDELHI @PIB_India https://t.co/G9HT5sswnz pic.twitter.com/lVfFlNxqHP
— DSTIndia (@IndiaDST) April 8, 2020
இதற்கு மத்திய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி வழங்கியுள்ளது. இது குறித்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறுகையில், "கோவிட்-19 வைரஸ் தொற்றை உறுதிப்படுத்தும் சோதனைகளில் வேகம், செலவு, துல்லியம் ஆகியவை கடும் சவால்களாக உள்ளன.
இந்தச் சவால்களை சமாளிக்க, பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதுமையான பல வழிகளை உருவாக்கியுள்ளன. அதில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு நாங்கள் ஆதரவு வழங்குகிறோம்”என்றார்.
-
Dept of Science & Technology supports #StartUps in developing solutions to detect #Covid_19 #Pune based startup develops #RapidTestKit for screening ; can spot results in less than 15 min/sample. Sample size can be increased to 100 samples/ hour
— PIB in Maharashtra 🇮🇳 #StayHome (@PIBMumbai) April 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
▶️https://t.co/Iu8P6YUOdx pic.twitter.com/hcgmMrzHc7
">Dept of Science & Technology supports #StartUps in developing solutions to detect #Covid_19 #Pune based startup develops #RapidTestKit for screening ; can spot results in less than 15 min/sample. Sample size can be increased to 100 samples/ hour
— PIB in Maharashtra 🇮🇳 #StayHome (@PIBMumbai) April 8, 2020
▶️https://t.co/Iu8P6YUOdx pic.twitter.com/hcgmMrzHc7Dept of Science & Technology supports #StartUps in developing solutions to detect #Covid_19 #Pune based startup develops #RapidTestKit for screening ; can spot results in less than 15 min/sample. Sample size can be increased to 100 samples/ hour
— PIB in Maharashtra 🇮🇳 #StayHome (@PIBMumbai) April 8, 2020
▶️https://t.co/Iu8P6YUOdx pic.twitter.com/hcgmMrzHc7
ஒரு மணி நேரத்தில் 50 மாதிரிகளைக் கண்டறியும், ஒரு கருவியும், கூட்டமான இடங்களில் பயன்படுத்த 100 மாதிரிகளை சோதிக்க உதவும் மற்றொரு கருவியையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர். இதற்கு காப்புரிமை வேண்டியும் விண்ணப்பித்துள்ளனர். இந்தக் கருவிகள் வெற்றியடையும்பட்சத்தில், ஒருவருக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை மிகவும் விரைவாகவும், துல்லியமாகவும் கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் வைரஸ் தொற்றுப் பரவலையும் கட்டுப்படுத்த முடியும்.
இதையும் படிங்க: நெட்ஃபிளிக்ஸ் - குழந்தைகள் பார்க்கும் வீடியோக்களை கட்டுப்படுத்த புதிய வழி