முன்னணி பணப்பரிவர்த்தனை நிறுவனமான பே.டி.எம். நிறுவனத்தின் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இன்று நீக்கப்பட்டுள்ளது. தங்களின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறிய காரணத்தால் பணப்பரிவர்த்தனை செயலியான பே.டி.எம். மற்றும் பே.டி.எம். ஃபர்ஸ்ட் கேம்ஸ் ஆகிய செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.
முன்னதாக பெட்டிங், சூதாட்டம் போன்றவற்றை ஊக்குவிக்கும் செயலிகளை நீக்கவுள்ளோம் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை தெரிவித்துவந்தது. நாளை (செப் 19) ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தற்போது பே.டி.எம் செயலி நீக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கேஸினோ போன்ற சூதாட்ட விளையாட்டுகளில் பே.டி.எம் செயலிகள் இருப்பது, கூகுள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக இருக்கும், அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என பே.டி.எம். நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் ரசிகரா நீங்கள்? உங்களுக்கான ஜியோவின் புதிய பிளான் இதோ!