வாஷிங்டன் டிசி: பழைய காட்சி தரத்திற்கு தனது சேவையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது.
- கரோனா காலங்களில் வீட்டில் இருந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாலும், இணைய சேவை வெகுவாக பயன்பட்டு அதில் ஏதேனும் தொய்வு ஏற்படும் என்ற காரணத்தினாலும் ஒடிடி தளங்கள் தங்களின் காட்சி தரத்தைக் குறைத்தது.
- இதில் யூ-டியூப், நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட் ஸ்டார் ஆகியவைப் பொருந்தும்.
- தற்போது ஊரடங்கில் அரசுகள் தளர்வுகள் மேற்கொண்டுள்ளதால், எச்.டி தரத்தில் மீண்டும் சேவையை தர பல தரப்பு பயனர்கள் இடமிருந்தும் கோரிக்கை எழுந்தது.
- இதனை கருத்திற்கொண்டு முதலாவதாக நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி, தனது தளத்தில் வெளியிடப்படும் காட்சிகளை எச்.டி தரத்தில் கண்டுகளிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.