ஸ்மார்ட் போன் அல்லது UPI ID இல்லாதவர்களுக்கும் கூட அவர்களது ஆதார் நம்பரை பயன்படுத்தி BHIM App யூஸர்கள் பணம் அனுப்பலாம் என்று UIDAI கூறி இருக்கிறது. அதாவது BHIM உபயோகிப்பாளராக இருந்தால், பணம் அனுப்பவேண்டிய நபரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி பணபரிமாற்றம் செய்ய அவரது ஆதார் நம்பரை எண்டர் செய்து verify பட்டனை அழுத்த வேண்டும்.
UIDAI வழங்கியுள்ள தகவலின் படி ஆதார் லிங்க் மற்றும் பயனாளிகளின் முகவரியை சரிபார்த்த பின்பே, உபயோகிப்பாளர் அவருக்கு பணத்தை அனுப்ப முடியும். பணம் பெறுபவர்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கியின் IFSC ஆகியவற்றை உள்ளிடுவதற்கு மாற்றாக இது பயனுள்ளதாக இருக்கும்.
ஆதார் அடிப்படையிலான கிரெடிட்களை பெற ஒருவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெறுநரின் வங்கிக் கணக்கு ஒருவருக்குப் பணம் மாற்றப்படும்போது அதில் வரவு வைக்கப்படும். பயோமெட்ரிக் அடிப்படையிலான AAdhar Pay ஆப்ஷனையும் BHIM பெற்றுள்ளது. Aadhaar Pay பயன்படுத்தும் வணிகர்களுக்கு, ஆதார் எண் மற்றும் கைரேகை மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்.
வாடிக்கையாளர்கள் பல வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், ஆதார் மூலம் பணம் பறிமாற்றம் செய்யும் போது, எந்த வங்கியிலிருந்து பணம் பற்மாற்றம் செய்ய வேண்டும் என்பதை நாம் தேர்வு செய்லாம்.