டெல்லி: மைக்ரோசாஃப்ட் மொழிபெயர்ப்பாளர் பயன்பாட்டு தளத்தில் நுழைந்துள்ளது ஒடியா மொழி
இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் 3.5 கோடி மக்களால் ஒடியா மொழி பேசப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் மொழிபெயர்ப்பு பயன்பாடு தளத்தில் தமிழ், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, உருது, ஆங்கிலம் ஆகியவற்றுடன் 12ஆவது இந்திய மொழியாக ஒடியா இணைந்துள்ளது.
இந்திய அரசங்காத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு பழமையான மொழிகளில் ஒடியாவும் ஒன்று. இதன் வரலாறு 1000 வருடங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். மேலும், இந்திய மாநிலமான ஒடிசாவின் உத்தியோகபூர்வ மொழியாகும். அதுமட்டுமில்லாமல் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இம்மொழி பரவலாக சில இடங்களில் பேசப்படுகிறது.