ETV Bharat / lifestyle

ஷேர் சாட் செயலியில், 750 கோடி முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் திட்டம்!

author img

By

Published : Aug 7, 2020, 6:27 PM IST

Updated : Aug 8, 2020, 1:04 PM IST

உலக அளவில் தொழில்நுட்ப வல்லுநர்களால் பெரிதும் பேசப்பட்டு வந்தது மைக்ரோசாப்ட் - டிக்டாக் நிறுவன ஒப்பந்தம். டிக்டாக்கை மைக்ரோசாப்ட் வாங்கவுள்ளது எனும் தகவல்கள் கசிந்து வரும் வேளையில், டிக்டாக் போன்ற சிறு காணொலிப் பகிர்வு தளமான ஷேர் சாட் செயலியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 750 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைக்ரோசாப்ட் ஷேர்சாட்
மைக்ரோசாப்ட் ஷேர்சாட்

சிறு காணொலிப் பகிர்வு தளமான ஷேர்சாட் செயலியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 750 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியானால், ஷேர்சாட் நிதித்திரட்டல் மதிப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடு மூன்றில் ஒரு பங்காக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மாதத்திற்கு மொத்தம் 14 கோடி பார்வையாளர்களை ஷேர்சாட் செயலி கொண்டுள்ளது.

ஸ்னாப்சாட்: டிக்டாக் அம்சங்களை அறிமுகம் செய்ய திட்டம்

இந்த செயலியானது தமிழ், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, பெங்காலி, ஒடியா, கன்னடா, அசாமீஸ், ஹரியானி, ராஜஸ்தானி, போஜ்புரி, உருது, இந்தி ஆகிய 15 இந்திய மொழிகளில் செயல்பாட்டில் உள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், நான்கு ஆண்டுகளில் பெரும் முதலீட்டை ஈர்த்துள்ளது.

டிக்டாக் செயலியை கையகப்படுத்தும் மைக்ரோசாஃப்ட்!

டிக்டாக் தடை செய்யப்பட்டவுடன் ஷேர்சாட் நிறுவனம் ‘மோஜ்’ எனும் புதிய குறு காணொலிகள் பகிரும் தளத்தை அறிமுகப்படுத்தி நிலையில், 50 லட்சம் பயனாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து அச்செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக ஷேர்சாட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Last Updated : Aug 8, 2020, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.