டெல்லி: சீனாவின் புகழ்பெற்ற கைபேசி தயாரிப்பு நிறுவனமான சியோமியின் எம்.ஐ ப்ரவுசர், மெய்டூ நிறுவனத்தின் மெய்பெய் ஆகிய செயலிகள் இந்திய அரசின் இரண்டாம் கட்ட சீன செயலிகள் தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டாம் கட்ட தடை பட்டியலில் பிரபலமான ஹீரோஸ் வார், ஏர் பிரஷ், போஸ்காம், கேப்கட், பெய்டூ உலாவி, எம்.ஐ ப்ரவுசர் போன்ற சீன செயலிகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட சீன செயலிகள்: பப்ஜி உள்பட மேலும் 47 செயலிகளுக்கு தடையா?
இதுமட்டுமில்லாமல், 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் பயனர்களின் தனியுரிமை தகவல்களை திருடுகிறதா என்று மத்திய அரசு கண்காணித்துவருகிறது.