ETV Bharat / lifestyle

சென்னையைச் சேர்ந்த படைப்பாளர்களைக் குறிவைக்கும் இன்ஸ்டாகிராம்! - Instagram reels

சென்னையில் உள்ள இன்டாகிராம் படைப்பாளர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் கண்டறிந்து, இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள் குறித்தும், இன்ஸ்டாகிராம் செயலியைச் சிறப்பாகப் பயன்படுத்தி தங்களது காணொலிகளை எப்படிப் பிரபலப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

Instagram targeting chennai creators
Instagram targeting chennai creators
author img

By

Published : Dec 18, 2020, 7:36 AM IST

சென்னை: பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் சென்னையைச் சேர்ந்த படைப்பாளர்களுக்கு, பிரத்யேகப் பயிற்சியளித்து, வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

‘Born on Instagram’ என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள இன்ஸ்டாகிராம் படைப்பாளர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் கண்டறிந்து, இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள் குறித்தும், இன்ஸ்டாகிராம் செயலியைச் சிறப்பாகப் பயன்படுத்தி தங்களது காணொலிகளை எப்படிப் பிரபலப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள ரீல் வசதி குறித்து படைப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரீல் வசதிக்குப் பயனாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புள்ளது.

இதில் பிரபலமடைய பெரிய அளவுக்குப் பயனாளர்கள் பின்தொடரத் தேவையில்லை. இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் டாப்பிலும், டிஸ்கவர் பகுதியில், பிரபலமாகவுள்ள ரீல்கள் பயனாளர்களுக்குக் காண்பிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இவ்வாறு அண்மையில் பலரும் பிரபலமடைந்துள்ள நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனம் சென்னையைக் குறிவைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய பேஸ்புக் இந்தியா இயக்குநர் மனீஷ் சோப்ரா, "இன்ஸ்டாகிராம் செயலியிலுள்ள புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது நாங்கள் சென்னையைச் சேர்ந்த படைப்பாளர்களை வளர்த்து பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதன்மூலம் அடுத்தகட்டமாக நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் உள்ளடக்கப் படைப்பாளர்களை (digital content creators) அடையாளம் காணலாம்" என்றார்.

பேஸ்புக் நிறுவனத்தின் ஃபியூயல் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில் ‘Born on Instagram’ குறித்து அறிவிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.