பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில்கேட்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் சமீபத்தில் ஹேக்கர்களால் முடக்கப்பட்டன. இதன் பின்னணியில் பிட்காயின் மோசடி நடந்ததாகவும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள இந்தியாவின் சைபர் பாதுகாப்பு அமைப்பு, இந்த விவகாரத்தில் எத்தனை இந்திய பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என விளக்கம் கேட்டுள்ளது. மேலும் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.