மும்பை : ஐமொபைல் பே அப்ளிகேஷன் வாயிலாக வங்கிகளின் சேவையை எளிதில் பெறலாம்.
பணப் பரிவர்த்தனை செயலியான, 'ஐமொபைல் பே' பல்வேறு வசதிகளை ஒருங்கே நமக்கு வழங்குகிறது. முதலாவதாக வாடிக்கையாளர்கள் அல்லது வியாபாரிகளுக்கு யூபிஐ (Unified Payments Interface) எண் வழங்கப்படும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அல்லது வியாபாரிகள் பணப் பரிவர்த்தனை, பல்வேறு கட்டணங்கள் (பில்) செலுத்துதல், ரீசார்ஜ் மட்டுமின்றி சேமிப்பு கணக்கு போன்ற உடனடி சேவைகளையும் பெறலாம். மேலும், முதலீடுகள், கடன்கள் (லோன்), கடன் அட்டை (கிரெடிட் அட்டை), கிப்ட் கார்டுகள், டிராவல் கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன.
இது மட்டுமின்றி ஐமொபைல் பே செயலியில், எந்த வங்கிக்கும் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதியும் உள்ளது. இதில் மற்றொரு வசதியும் உள்ளது.
-
#JustIn: #ICICIBank launches 'iMobile Pay': India's first app that offers payments and banking services for all. Download #iMobilePayByICICIBank now and start transacting: https://t.co/Mv4O0qe2mY pic.twitter.com/ZAEWw5eAgP
— ICICI Bank (@ICICIBank) December 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#JustIn: #ICICIBank launches 'iMobile Pay': India's first app that offers payments and banking services for all. Download #iMobilePayByICICIBank now and start transacting: https://t.co/Mv4O0qe2mY pic.twitter.com/ZAEWw5eAgP
— ICICI Bank (@ICICIBank) December 7, 2020#JustIn: #ICICIBank launches 'iMobile Pay': India's first app that offers payments and banking services for all. Download #iMobilePayByICICIBank now and start transacting: https://t.co/Mv4O0qe2mY pic.twitter.com/ZAEWw5eAgP
— ICICI Bank (@ICICIBank) December 7, 2020
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் யூபிஐ எண்கள் மொபைல் போனில் சேமித்துவைக்கப்படும் வசதியும் உள்ளது. பணப் பரிவர்த்தனை தொடர்பான பல்வேறு அப்ளிகேஷன்கள் தற்போது கிடைக்கும் நிலையில், இது எளிதாகவும், அதேநேரம் நம்பிக்கைக்குரிய வகையிலும் இருக்கும் என்று ஐசிஐசிஐ வங்கி அறிக்கை கூறுகின்றது.
இதையும் படிங்க : பணம் டெபாசிட் செய்தால் ரூ.50 கட்டணம் - ஐசிஐசிஐ வங்கி அதிரடி