சைபர் இடர் மதிப்பீடு தளமான சைபிள் (CYBLE) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 'மின்னஞ்சல் முகவரி, பெயர், முகநூல் கணக்கு, பிறந்த தேதி, அலைபேசி எண் போன்ற 26 கோடியே 7 லட்சம் பயனர்களின் தரவுகளை ஹேக்கர்கள் வெறும் 41ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்றது அம்பலமாகியுள்ளது.
ஆனால், பயனர்களின் கடவுச்சொல்லை ஹேக்கர்கள் விற்கவில்லை என்பதை சைபிள் தெளிவுப்படுத்தியுள்ளது. இதனை முயற்சி செய்து பயனர்களின் தரவுகளைப் பெற்று உறுதிசெய்துள்ளது, சைபிள்.
வாட்ஸ்அப் காலிங்: இனி 8 பேர் வரை கூட்டாக வீடியோ அழைப்பில் பங்கெடுக்கலாம்
இதுகுறித்து பயனர்கள் கவலைப்படத் தேவையில்லை எனக் கூறியுள்ள ஃபேஸ்புக், மூன்றாம் தர செயலிகள் மூலம் இந்தத் தகவல்கள் கசிந்திருக்கலாம் என்று கூறியுள்ளது. முன்னதாக டிசம்பர் 2019 காலகட்டத்தில், இதேபோன்று கோடிக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பயனர்கள் அனைவரும் தங்களின் தனிப்பட்ட ஃபேஸ்புக் அமைப்புகளை சரிவர நிர்வகிக்கவேண்டும் வேண்டும் என்று சைபிள் பரிந்துரை செய்துள்ளது. இதனை கண்டுகொள்ளாத பயனர்களின் தகவல்கள் திருடப்படும் சூழல் இருக்கிறது என அந்நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
குறைந்த விலையில் சாம்சங்கின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்!
ஃபேஸ்புக் மட்டுமல்லாமல், கடந்த வாரம் ஜூம் செயலி வழியாக அலுவலக காணொலி அழைப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடி இணையத்தில் கசியவிட்டது குறிப்பிடத்தக்கது.