டெல்லி: ஜிமெயில், டிரைவ் (கூகிள் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைடுகள், வரைபடங்கள், படிவங்கள், ஜம்போர்டு கோப்புகள்), புகைப்படங்கள் தளம் செயலற்று இருந்தால் கூகுள் நிறுவனம் அதன் தரவுகளை நீக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், சேமிப்பு வரம்பை மீறி கோப்புகளை சேமித்தால், கூகுள் தாமாகவே உள்ளடக்கங்களை நீக்கும் என்று தனது புதிய கொள்கையில் தெரிவித்துள்ளது. ஜூன் 1, 2020 முதல் இந்த கொள்கையை கூகுள் நிறுவனம் அமல்படுத்தவுள்ளது.
மேலும், பயனர்களுக்கு கூடுதலாக சேமிப்பு வசதி வேண்டுமெனில், கூகுளின் ‘ஒன்’ சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதற்கான மாத சந்தாவை பயனர்கள் செலுத்தவேண்டியிருக்கும்.