ETV Bharat / lifestyle

ஜூன் 1 முதல் இவர்களுக்கு ஜிமெயில் சேவைகள் கிடையாது: கூகுள் அதிரடி - கூகுள் புதிய கொள்கை முடிவுகள்

ஜிமெயில் மூலம் ட்ரைவ், ஷீட்ஸ், ஃபோட்டோஸ், டாக்ஸ், யூடியூப் போன்ற பல சேவைகளை அளித்து வரும் கூகுள் நிறுவனம், ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய கொள்கை முடிவுகளை எடுக்கவுள்ளது. அதற்கான அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டு, பயனர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

Google Photos ending free storage on June, Google Photos, ஜூன் 1 முதல் கூகுள் சேவைகளுக்கு கட்டணம், கூகுள் ஃபோட்டோஸ், கூகுள் செயலிகளுக்கு கட்டணம், கூகுள் ட்ரைவ், கூகுள் ஷீட்ஸ், கூகுள் டாக்ஸ், கூகுள் யூடியூப், ஜிமெயில், google drive, google sheets, youtube, google photos tamil, google new policy tamil, google photos explained in tamil, கூகுள் போட்டோஸ் விளக்கம், கூகுள் ஃபோட்டோஸ் விளக்கம், கூகுள் புதிய கொள்கை முடிவுகள்
Google Photos ending free storage on June 1
author img

By

Published : May 29, 2021, 9:11 AM IST

Updated : May 29, 2021, 11:44 AM IST

ஹைதராபாத்: ஜிமெயில் சார்ந்த சேவைகளுக்கு புதிய கட்டுபாடுகளை கூகுள் நிறுவனம் விதித்துள்ளது.

உலகளவில் அதிக பயனர்களை கொண்டு இயங்கி வருகிறது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவைகள். முன்பு, 80ஸ்களிடம் பிரபலமாக இருந்த யாஹு, ரெட்டிஃப்-மெயில், மைக்ரோசாப்ட்டின் ஹாட்மெயில் எனும் பழம்பெரும் மின்னஞ்சல் சேவைகளை ஓரங்கட்டி தனக்கென ஒரு தனி இடத்தை ஜிமெயில் தக்கவைத்துக் கொண்டது.

Google Photos ending free storage on June, Google Photos, ஜூன் 1 முதல் கூகுள் சேவைகளுக்கு கட்டணம், கூகுள் ஃபோட்டோஸ், கூகுள் செயலிகளுக்கு கட்டணம், கூகுள் ட்ரைவ், கூகுள் ஷீட்ஸ், கூகுள் டாக்ஸ், கூகுள் யூடியூப், ஜிமெயில், google drive, google sheets, youtube, google photos tamil, google new policy tamil, google photos explained in tamil, கூகுள் போட்டோஸ் விளக்கம், கூகுள் ஃபோட்டோஸ் விளக்கம், கூகுள் புதிய கொள்கை முடிவுகள்

ஒரே மின்னஞ்சல் போதும், எங்களிடம் உள்ள அனைத்து சேவைகளையும் இணையதள பக்கங்களின் வாயிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். அவை மேகக்கணினி முறையில் இயங்கி, தரவுகள் மற்றும் கோப்புகளை அங்கே சேமித்து வைக்கும். இதை நீங்கள் எங்கிருந்தாலும் எளிதில் அணுக முடிவும். இதையே மந்திரச் சொல்லாக கூறி கூகுள் நிறுவனம் பயனர்களை தங்கள் வசம் இழுத்து, அவர்களுக்கு கூறியபடியே அசரடிக்கும் சேவைகளையும் வழங்கியது.

தாகம் தணிக்கும் கூகுள் சேவைகள்

காலம் செல்ல செல்ல, தொழில்நுட்பமும் அதித்தீவிரமாக வளர்ந்து வந்தது. இதன் காரணமாக இணையதள பயனர்களுக்கு டெக் தாகமும், தேவைகளும் அதிகரித்தன. அந்த தாகத்திற்கு நீரூற்றியது கூகுளின் பிரதான சேவைகள். பயனர்களின் செயல்பாடுகளை செவ்வன கணித்து, அவர்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து, அதன்படி சேவைகளை வாரி வழங்கியது கூகுள்.

முதற்கட்ட பணிகளில் கூகுள் நிறுவனம் சேவைகளை இலவசமாக அளித்து வந்தது. வருடங்கள் நகர நகர மக்களிடம் கூகுளின் சேவைகள் மிக அவசியம் என்றான போது, நிறுவனமும் தன் போக்கை மாற்றிக்கொண்டது.

சில சேவைகளை கட்டண வரம்பிற்குள் கொண்டு வர திட்டமிட்டு, அதனை செயல்படுத்தியும் காட்டியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கூகுள் ஃபோட்டோஸ் தளத்தில் பயனர்களுக்கு 15 ஜி.பி., (நல்ல தரத்திலுள்ள 5000 புகைப்படங்கள் வரை சேமிக்க முடியும்) சேவையை உயர்தரத்தில் பயன்படுத்த (மிக உயர்ந்த தர புகைப்படங்கள் / காணொலிகள்) கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.

எனினும், ஹெச்.டி தரத்தில் படங்களை பதிவேற்றும் பயனர்களுக்கு வரம்பில்லா இலவச சேவையை நிறுவனம் அளித்திருந்தது. அதாவது ஹெச்.டி தரத்தில் புகைப்படங்களை 'ஃபோட்டோஸ்' தளத்தில் பதிவேற்ற நிபந்தனைகள் எதுவும் பயனர்களுக்கு விதிக்கப்படவில்லை. இதில் பெரிதும் பயனடைந்த ஆண்ட்ராய்டு பயனர்கள், தங்கள் கைபேசியை மாற்றும் வேளையில், புகைப்படங்கள் தவறாது பார்த்துக் கொண்டனர். இது அவர்களுக்கு மிக எளிமையாக இருந்தது. தங்களின் நினைவுகளைக் கூகுள் அழிக்காமல் பாதுகாக்கிறது என்று நம்பினர்.

புதிய கொள்கை முடிவு

ஆனால், இதற்கு வேட்டு வைக்கும் விதமாக, கூகுள் நிறுவனம் ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய கொள்கைகளை அமல்படுத்தவுள்ளது. இதனால் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் கீழ்வருமாறு,

  • ஹெச்.டி தரத்தில் 15ஜிபி வரை மட்டுமே புகைப்படங்களை சேமிக்கலாம்
  • கூடுதலாக தேவைப்பட்டால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்
  • 2 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகள் அழிக்கப்படும்
  • அழிக்கப்படும் ஜிமெயில் கணக்குகள் தொடர்புடைய சேவைகள் (ட்ரைவ், ஃபோட்டோஸ், ஷீட்ஸ், டாக்ஸ், யூடியூப்) அனைத்தும் ரத்து செய்யப்படும்

கூகுளின் புதிய முடிவிற்கு காரணம்

  1. தேவையற்ற கணக்குகளை உருவாக்கும் தனிநபர் பயனாளர்கள் (ஒருவருக்கு 10க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு மேல்)
  2. தேவையற்ற கோப்புகள் சேமிக்கும் தனிநபர் பயனாளர்கள் (தெரியாமல் எடுத்த புகைப்படங்கள், தெளிவற்ற புகைப்படங்கள், காணொலிகள் என அனைத்தும் சேமித்து வைக்கப்படுவது)
  3. மேற்கூறிய காரணங்களால் தான் கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. இணைய போக்குவரத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த தேவையற்ற தரவுகளை ஒழுங்குமுறை படுத்தவே கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக கணக்குகள் அழிக்கப்படுமா?

இல்லை. இதுகுறித்த அறிவிப்புகளை மின்னஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாக பயனர்களுக்கு கூகுள் அனுப்பும். அதன்படி தங்கள் கணக்குகளை பயனர்கள் பாதுகாத்துக்கொள்ளலாம்

பயனர்கள் என்ன செய்ய வேண்டும்

  • கூகுள் ஃபோட்டோஸ், கூகுள் ட்ரைவ் ஆகியவற்றை பாதுகாக்க, தேவையற்ற கோப்புகளை அழித்து, 15 ஜிபி சேமிப்புத் திறனுக்குக் கீழ் இருக்குமாறு கோப்புகளை கொண்டு வரவேண்டும்
  • கூகுள் அளித்துள்ள 'ஃபோட்டோஸ் மேனேஜ்மெண்ட்' தளத்தின் மூலம் தேவையற்ற புகைப்படங்களை உடனே அழித்துவிடுங்கள்

  • இந்த தளம் கைபேசி, இணையதளம் என எதிலும் அணுகும்படி கூகுள் கட்டமைத்துள்ளது
  • இது பயனர்களுக்கு தேவையற்ற புகைப்படங்கள், காணொலிகளை அடையாளம் கண்டு காட்சிப்படுத்தும்
  • அவை தேவையில்லை எனில் உடனடியாக அழித்து விடலாம்
  • சேமிப்பு திறன் போதவில்லை எனில், கூடுதலாக கட்டணம் செலுத்தி சேமிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் அல்லது தேவைக்கேற்ப எஸ்டி கார்டு வாங்கிக் கொள்ளலாம்

'கூகுள் ஃபோட்டோஸ்' வரம்பற்ற சேவைகளே இல்லையா

இருக்கிறது. நீங்கள் சேமிக்கும் புகைப்படங்களின் தரம் குறைக்கப்பட்டு பதிவேற்றும் விருப்பத் தேர்வில், வரம்பற்ற படங்களை சேமித்து வைக்க முடியும். ஆனால் இதில் சேமிக்கப்படும் புகைப்படங்கள் தெளிவுத்திறன் அற்றதாக இருக்கும் என்பதே உண்மை. கூடுதலாக 100 ஜிபி சேமிப்பு திறனை பெற மாதம் ரூ.120 செலுத்த வேண்டியிருக்கும். இதற்கான தெளிவுகளை 'கூகுள் ஒன்' செயலி அல்லது தளத்தின் மூலம் பயனர்கள் அறிந்துகொள்ளலாம். இல்லையெனில் 'எஸ்டி கார்டு' (சேமிப்பு அட்டை) ஒன்றை தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்

தற்போது களமிறக்கப்படும் நிறைய கைபேசிகள், ஒரு சிம்கார்டு + ஒரு எஸ்டி கார்டு அல்லது இரு சிம்கார்டுகள் என்ற ஹைப்ரிட் விருப்பத் தேர்வுடன் வருகிறது. ஆனால், கூகுளின் இந்த புதிய கொள்கை முடிவால், இனிவரும் காலங்களில் சேமிப்புத் திறனுக்கு பயனர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பர். இதன் காரணமாக, டெடிகேட்டட் விருப்பத் தேர்வுடன் (சிம்கார்டு + சிம்கார்ட்டு + எஸ்டி கார்டு) சிம் ஸ்லாட்டுகளை கைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் என்று நம்பலாம்.

Last Updated : May 29, 2021, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.