ETV Bharat / lifestyle

சக்கர நாற்காலி செல்லும் இடத்தை கணிக்கும் கூகுள் மேப்ஸ்! - கூகுள் மேப்ஸ்

"அணுகக்கூடிய இடங்கள்" கூகுள் வழங்கும் உதவிகரமான புதிய அம்சம். ஒரு இடத்தில் சக்கர நாற்காலிகள் அணுகக்கூடிய இருக்கை, ஓய்வறைகள் அல்லது வண்டி நிறுத்துமிடம் போன்ற அணுகல் தகவலையும் அடையாளம் காண மக்களுக்கு இந்த புதிய வசதி உதவும். இவ்வசதியானது கூகுள் வரைப்படத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

google maps new update
google maps new update
author img

By

Published : May 23, 2020, 6:49 PM IST

சான் பிராசிஸ்கோ (அமெரிக்கா): சக்கர நாற்காலிகள் அணுகக்கூடிய இடங்களை கூகுள் நிறுவனத்தின் ‘மேப்ஸ்’ தளத்தின் வாயிலாக அறிந்துகொள்ளும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘அணுகக்கூடிய இடங்கள்’ வசதியை உயிர்பித்தால் (ஆன் செய்தால்), சக்கர நாற்காலி போன்று சிறுபடம் வரைப்படத்தில் தோன்றும். மேலும், அணுகக்கூடிய இருக்கைகள், ஓய்வறைகள், வாகன நிறுத்துமிடம், நுழைவு வாயில்கள், கழிப்பறைகள் போன்றவற்றையும் தெளிவாக பயனர்களுக்கு காட்டும்.

google maps new update
கூகுள் மேப்ஸ்

இந்த சேவை ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ‘கூகுள் மேப்ஸ்’ பயனர்களுக்கு இந்த சேவையை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் பல நாடுகளுக்கு இச்சேவையை நீட்டிப்பதற்கான வேலையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

தேவையில்லாத பின்னூட்டங்களைத் தடுக்க புதிய அம்சத்தை நிறுவும் ட்விட்டர்!

தரவுகளின்படி, உலக நாடுகளில் மொத்தம் 13 கோடி பேர் சக்கர நாற்காலி பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது. சக்கர நாற்காலி அணுகக்கூடிய இடங்கள் தொடர்பான தகவல்களை 1.5 கோடி இடங்களில் இருந்து கூகுள் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.