தகவல் தொழில்நுட்ப யுகத்தில் உலகெங்கிலும் சமுகவலைதளங்கள் இல்லாமல் இயக்கமே இல்லை. அதேவேளை, அவ்வப்போது தொழில்நுட்பக் காரணங்களால் சமூகவலைத்தள சேவைகள் முடங்குகிறன்றன.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இன்று(அக்.4) பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. மேலும் இந்தியா உள்பட பல நாடுகளில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ள காரணத்தால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த முடக்கமானது, எப்போது சரிசெய்யப்படும் என்ற தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.