ஹோலி பண்டிகை 2021 மார்ச் 29ஆம் தேதி திங்கள்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் அனைத்து கலாசாரங்களைக் கொண்ட மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஹோலி. இப்பண்டிகை குறித்த வாழ்த்து மழைகளும், கொண்டாட்டங்கள் குறித்து பேச்சுகளும் சமூக வலைதளங்களில் தொடங்க ஆரம்பித்துவிட்டன.
இந்நிலையில், பிரபல ஃபேஸ்புக் நிறுவனம், ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயனாளர்களுக்கு, ஹோலி தீம் அவதார் ஒட்டுவில்லைகளை அறிமுகம்செய்துள்ளது. பல பதிவுகளில் பின்னூட்டம் அளிக்கவோ அல்லது நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவோ இந்த ஒட்டுவில்லைகளைப் பயன்படுத்தலாம்.
இதுகுறித்து ஃபேஸ்புக், "கடந்த இரண்டு வாரங்களில் 40 லட்சம் பயனாளர்கள், 60 லட்சத்திற்கும் அதிகமான முறையில் ஹோலி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இதைக் கருத்தில்கொண்டே, மக்களிடையேயான கலந்துரையாடலைக் குறைக்கும்விதமாக, ஒட்டுவில்லை அம்சம் அறிமுகம் செய்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உலகளவில் 100 கோடி பதிவிறக்கம் தாண்டிய பப்ஜி