செயலி எவ்வாறு செயல்படுகிறது?
- நீங்கள் உங்கள் செயலியில் நோடிஃபிகேஷனை ஆன் செய்து வைத்தால், அது ப்ளூடூத் மூலம் சீரான இடைவெளியில் அருகில் இருக்கும் போன்களையும் சேர்த்து தொடர்ச்சியாக ஸ்கேன் செய்து கொண்டிருக்கும்.
- இரண்டு போன்களும் இணைந்து தங்களது தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.
- நீங்கள் கோவிட்-19 பாதிப்புக்குள்ளானால் சுகாதாரத்துறை உங்களை தொடர்பு கொண்டு, அதன் விவரங்களை கோட் மூலம் அனுப்பி மற்ற கான்டக்ட்களுடன் பகிரும் வசதியை ஏற்படுத்தித் தரும்.
- அத்துடன் உங்களது போன், கடந்த இரண்டு வாரங்களில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அப்டேட் செய்துகொண்டே இருக்கும்.
- கோவிட் பாதிப்பு ஏற்பட்ட நபர் உங்களின் ஆறு அடிக்கும் குறைவான தொலைவில் இருக்கும் பட்சத்தில் மொபைல் போன் அலெர்ட் கொடுக்கும்.
- இந்தத் தொழில்நுட்பம் மூலம் பாதிக்கப்பட்டவர், அவருடன் தொடர்பில் இருந்தவர் ஆகியோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்த வாய்ப்புகள் உருவாகின்றன.
- அதேவேளை பொதுமக்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தின்மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது சுகாதாரத் துறைக்கு சிரமமாக உள்ளது. 40 விழுக்காடு அமெரிக்க மக்கள் இந்த கான்டக்ட் டிரேசிங் முறையை நம்ப மறுக்கின்றனர்.
- மக்களுக்கு பிரைவசி தொடர்பான நம்பிக்கையை சுகாதாரத்துறை அளிக்கும்போதிலும் அதை ஏற்றுக் கொள்வதற்கு கணிசமான மக்கள் தயங்குகிறார்கள்.
- புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு இந்தச் செயலிகள் சிறப்பாக பங்காற்றுகின்றன. குறிப்பாக, அயர்லாந்து நாட்டில் தொழில்நுட்பத்தை சுமார் 33 விழுக்காடு மக்கள் பயன்படுத்துகின்றனர்.
- அதேவேளை சமூகத்தில் பின்தங்கிய மக்கள் இந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வருந்ததக்க நிகழ்வாகவும் உள்ளது.