ETV Bharat / lifestyle

Bharat Self Meter Reading App: மின்சார பயன்பாட்டை தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்! - tech news in tamil

பயனாளர்கள் தங்களின் மின்சார பயன்பாட்டை தெளிவாக அறிந்துகொள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த புதிய தொழில் முனைவு நிறுவனமான கோரல் இன்னொவேஷன்ஸ் Bharat Self Meter Reading எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Bharat Self Meter Reading App
Bharat Self Meter Reading App
author img

By

Published : Aug 15, 2020, 6:56 PM IST

ஹைதராபாத்: டெக்கிகளான சிக்கிந்தர் ரெட்டி, தந்த்ரா, வினய் பார்கவ் ரெட்டி ஆகியோர் இணைந்து ‘Bharat Self Meter Reading’ எனும் செயலியை மார்ச் 2020இல் அறிமுகப்படுத்தினர்.

இந்த செயலி வடிவமைப்பிற்கு முன், சிக்கிந்தர் இது தொடர்பாக பல செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவந்தார். ஆனால் அவரை திருப்திப்படுத்தும் விதத்தில் எந்த செயலியும் வடிவமைக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து தனது நண்பர் வினயை இணைத்துக் கொண்டு மின்சார பயன்பாட்டை தெளிவாக அறிந்துகொள்ளும் செயலியை வடிவமைத்துள்ளனர்.

இவர்கள் கோரல் இன்னோவேஷன்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்நிறுவனம் சார்பில் இந்த செயலி வெளியிடப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் உள்நுழைந்து, தங்கள் கைபேசி எண்ணை முதலில் பதிவுசெய்ய வேண்டும், அதன்பின் மின்சார இணைப்பிற்கான சேவை எண்ணை (சர்வீஸ் எண்) உள்ளீடு செய்து தங்களின் பதிவை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

டிக்டாக் மாற்று: சில் செய்ய உதவும் Chill 5!

அதைத் தொடர்ந்து Bharat Self Meter Reading செயலியானது நமது மின்சார பயன்பாட்டை செறிவுடன் கணக்கிட்டு அதன் அறிக்கைகளை நமக்களிக்கும். பலருக்கு ‘ஏன் இவ்வளவு கரண்ட் பில் வருது?’ என்ற கேள்விகள் எழும். இந்த கேள்விகளுக்கு விடையாக இந்த செயலி இருக்கும் என்று வடிவமைப்பாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.