ETV Bharat / lifestyle

அமேசானுக்கு அள்ளிக்கொடுக்கும் சேவை இதுதான்! - அமேசான் இணைய சேவை பிரிவு

அமேசான் நிறுவனம் தனது க்ளவுட் ஸ்டோரேஜ் சேவையான Amazon Web Services (AWS) மூலம் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 10 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது.

AWS
AWS
author img

By

Published : May 25, 2020, 4:13 PM IST

அமேசான் நிறுவனத்தின் சேவைகளில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங், அமேசான் பிரைம் வீடியோ, அமேசான் மியூசிக் ஆகியவை குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால் இவை அனைத்தையும்விட அமேசான் நிறுவனத்திற்கு அள்ளித்தரும் சேவைப் பிரிவான Amazon Web Services (AWS) பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

க்ளவுட் ஸ்டோரேஜை பயன்படுத்தி நிறுவனங்கள் தங்கள் தரவுகளை சேமிக்கவும் பயனாளர்களுக்கு அதை எடுத்துச் செல்லவும் உதவுவதே AWS. இந்த AWS ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 10 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது. கடந்தாண்டு இதே காலாண்டில் 7.7 பில்லியின் டாலர்களை AWS வருவாயாக ஈட்டியிருந்தது.

இது குறித்து AWS இணைய மாநாட்டில் பேசிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆண்டி ஜாஸி கூறுகையில், "இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்களும் AWS சேவையைப் பயன்படுத்தி இயங்குகின்றன.

அமேசான் பிரைம் வீடியோ மட்டுமின்றி; நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களும் AWS மூலம்தான் இயங்குகின்றன. இதுதவிர புகழ்பெற்ற இணைய வீடியோகேமான ஃபோர்ட்நைட்டும் AWS மூலமே இயங்குகின்றது.

சீனாவில் நாங்கள் வீடியோ கான்பரன்சிங் செயலி ஒன்றைத் தனியாக வைத்துள்ளோம். சர்வதேச அளவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஜூம் செயலியும் பெரும்பாலும் எங்கள் AWS கட்டமைப்பில்தான் இயங்குகின்றது.

இதுதவிர குழந்தைகள் இணையதளம் வழியாகக் கல்வி கற்க உதவும் ப்ளாக்போர்ட் மற்றும் கேன்வாஸ் ஆகியவையும் AWS மூலமே இயங்குகின்றன" என்றார்.

AWS சேவை தற்போது 26 மண்டலங்களில் வழங்கப்படுவதாகவும் விரைவில் இந்தோனேசியா, ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அமேசான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிளிப்கார்ட், அமேசானுக்கு நெருக்கடி கொடுக்கும் ஜியோமார்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.