சான் பிராசிஸ்கோ: புதியதாக ஆப்பிள் நிறுவனம் வழங்கவிருக்கும் ஐஓஎஸ் 14 இயங்குதளத்தின் பதிப்பில், ஆகுமெண்டட் ரியாலிட்டி(ஏ.ஆர்) மூலம் இயங்கும் கோபி செயலியை நிறுவியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் "என் செயலியை கண்டுபிடி" (Find my App) என்னும் செயலியிலும் புதிய ஏ.ஆர் தொழில்நுட்பம் புகுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருகில் இருக்கும் பொருட்கள், நடைபெறும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கணித்து பயனர்களுக்கு அதன்மூலம் தகவல்களை மேம்படுத்தி யதார்த்த காட்சியமைப்பிற்கு கொண்டுச் சேர்க்கும்.
புதிய துல்லிய நிற அமைப்பு தொழில்நுட்பங்களுடன் வெளிவருகிறது ஹானர் ஸ்மார்ட் டிவி!
இதன்மூலம் அவர்கள் ஒரு புதுவித அனுபவத்தை உணர முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேம்படுத்தப்பட்ட இந்த ஏ.ஆர் அம்சத்தினை ஃபைண்ட் மை ஆப் என்ற செயலியிலும் அனுபவித்துக் கொள்ள முடியுமாம்.
இந்த கோபி செயலியானது, பயனர்கள் திறன்பேசியில் விளையாட்டுகளை விளையாடும்போது அதன் கிராபிக்ஸ் மற்றும் காட்சி தரத்திற்கு சிறந்த ஊக்கியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்!
மேலும், இதன் மூலம் நிழல் உலகை நம் இமையருகே கொண்டு வந்து, புது வித அனுபவத்தை ஏ.ஆர் அம்சமிருக்கும் செயலிகளில் அனுபவிக்கலாம் என்று கூறப்படுகிறது.