சான் பிராசிஸ்கோ: ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்சுகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இயங்குதளம் தான் வாட்ச் ஓஎஸ்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதன் புதிய பதிப்பான வாட்ச் ஓஎஸ் 7 வெளியானது. அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் தரப்பிலிருந்து சிறுசிறு மாறுதல்களுடன் கூடிய புதிய அப்டேட்டுகள் வெளியாகின.
சாம்சங் கேலக்ஸி எப் 22: பழைய சிப்செட், புதிய அம்சங்கள், குறைந்த விலை!
ஆனால், தற்போது பாதுகாப்பு அம்சங்களில் பெரும் மாறுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலையற்ற இதயத் துடிப்பு கண்காணிப்பு, மாரடைப்பு கண்காணிப்பு போன்ற அம்சங்கள் புதிய பதிப்பான ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 7.6.1இல் மேம்படுத்தப்பட்டுள்ளன.