சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஒன் என்பது நான்கு ஆப்பிள் சேவைகளைத் தொகுக்கும் அனைத்து சேவைகளும் அடங்கிய சந்தா திட்டமாகும். உங்களுக்குப் பிடித்த ஆப்பிள் சேவைகளை ஒரு நம்பமுடியாத விலையில் பெறுவதற்கான எளிதான வழி இது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், உங்கள் ஆப்பிள் தகவல் சாதனங்களிலிருந்து இன்னும் அதிகமான இன்பத்தைப் பெறுங்கள். ஆப்பிள் ஒன் உங்களை மகிழ்விக்கவும் தகவலறிந்து கொள்ளவும் சிறந்த சேவைகளை வழங்கவும் உதவுகிறது. இச்சேவைகளில் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி +, ஆப்பிள் ஆர்கேட், ஐ-க்ளவுட் ஆகியவை அடங்கும்.
தனிப்பட்ட திட்டத்தில் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி +, ஆப்பிள் ஆர்கேட், 50 ஜிபி ஐ-க்ளவுட் சேமிப்பு ஆகியவை மாதத்திற்கு ரூ.195-க்கு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், குடும்பங்களுக்கான திட்டத்தில் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி +, ஆப்பிள் ஆர்கேட், 200 ஜிபி ஐ-க்ளவுட் சேமிப்பு ஆகியவை மாதத்திற்கு ரூ.365-க்கு பயனர்களுக்கு கிடைக்கிறது. இதனை மேலும் ஆறு குடும்ப உறுப்பினர்கள் வரை பகிர்ந்து கொள்ள முடியும்.
பிரீமியம் திட்டத்தில், ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி +, ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் நியூஸ் +, ஆப்பிள் ஃபிட்னெஸ் + 2 டெரா பைட் ஐ-க்ளவுட் சேமிப்பகம் ஆகியவை கிடைக்கும். இந்தத் திட்டத்தை 6 பேருக்கு பகிர்ந்துகொள்ள முடியும்.
‘ஆப்பிள் ஒன்’னில் உள்நுழைவது எப்படி? நீங்கள் iOS 14 உடன் ஐபோன், ஐபேட்-ஓஸ் 14 உடன் ஐபாட் அல்லது மேக்-ஓஎஸ் பிக் சுர் கொண்ட மேக் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பின்வருமாறு உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:
- அமைப்புகள் (செட்டிங்க்ஸ்)> பொது (ஜெனெரல்)> மென்பொருள் புதுப்பிப்புக்குச் செல்லவும் (சாப்ட்வேர் அப்டேட்)
- பின்னர், ஆப்பிள் சாதனங்களில் ‘ஆப்பிள் ஒன்’ என்ற சொல்லைத் தேடுங்கள்
- அமைப்புகள்> கணக்கு (அக்கவுண்ட்) > சந்தாக்களை நிர்வகி (மேனேஜ் சப்ஸிகிரிப்ஷன்ஸ்) என்பதற்குச் செல்லவும்.