ETV Bharat / lifestyle

வேர்ட்பிரஸ் புதுப்பிப்புகள் அனைத்தும் மீட்டமைக்கப்படும்: ஆப்பிள் நிறுவனம் உறுதி

ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் வேர்ட்பிரஸ் செயலிக்கான புதுப்பிப்புகளை துண்டித்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் வேர்ட்பிரஸ் புதிப்பிப்புகள் அனைத்திற்கும் உடனடி அனுமதி வழங்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆப் ஸ்டோரில் தங்கள் செயலிக்கான புதுப்பிப்புகள் அனுமதிக்கப்படுவதில்லை என்று நிறுவனம் குறைகூறிய நிலையில், ஆப்பிள் நிறுவனம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Apple apologises to WordPress
Apple apologises to WordPress
author img

By

Published : Aug 23, 2020, 7:10 PM IST

சான் பிரான்சிஸ்கோ: வேர்ட்பிரஸ் நிறுவனர் மாட் முல்லன்வெக், தங்கள் செயலியில் புது பதிப்புகளை, ஆப்பிள் ஆப் ஸ்டோர் அனுமதிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டியதையடுத்து, ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

இதைத் தொடர்ந்து, வேர்ட்பிரஸ் செயலியின் நிறுத்தபட்ட அனைத்து புதுப்பிப்புகளும், வருங்காலத்தில் வெளியிடப்படும் புதிய புதுப்பிப்புகளையும் அனுமதிக்க ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

"நாங்கள் செயலி வடிவமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றும் நாங்கள் ஏற்படுத்திய எந்த குழப்பத்திற்கும் மன்னிப்பு கோருகிறோம் என்று தன் அறிக்கையில் ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வேர்ட்பிரஸ் என்பது ஒரு வலைப்பதிவு மென்பொருளாகும். இது பி.எச்.பியில் எழுதப்பட்ட தளமாகும். பல்லாயிரக்கணக்கான வலைப்பதிவுகள் இதைப் பயன்படுத்தி வெளியிடப்படுகின்றன. ஏப்ரல் 2019 கணக்கெடுப்பின் படி உலகின் தலைசிறந்த 10 மில்லியன் வலைதளங்களில் 33.6 விழுக்காடு தளங்கள் வேர்ட்பிரஸ் மூலம் இயங்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.