டெல்லி: ஒரு பக்கம் உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிவரும் வேளையில், அமேசான் இந்தியா உணவுகளை டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியிருப்பது போட்டி நிறுவனங்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சேவை ஆரம்பத்தில் பெங்களூருவின் நான்கு அஞ்சல் குறியீட்டு இடங்களில் கிடைக்கும் (மகாதேவபுரா, மராத்தள்ளி, வைட்ஃபீல்ட், பெல்லந்தூர்). இந்த நான்கு இடங்களில் 100க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன.
அதில் பாக்ஸ் 8, சாய் பாயிண்ட், சாயோஸ், பாசோஸ், மேட் ஓவர் டோனட்ஸ் போன்ற விற்பனை நிலையங்களும், சங்கிலித் தொடர் உணவகங்களான ராடிசன் மற்றும் மேரியட் நிறுவனங்களில் (ஷாவோ, மெலங்கே, எம் கஃபே) போன்ற உணவகங்களும் இதில் அடங்கும்.
எல்ஜி-இன் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு!
ஆர்டர்களை அமேசான் தளத்தின் மூலம் பதிவுசெய்யலாம். ஆனால் இந்த விருப்பம் குறிப்பிட்ட அஞ்சல் குறியீட்டு பகுதிகளுக்குள் மட்டும் தான் கிடைக்கும். அமேசான் தனது ஊழியர்களிடையே இந்தியாவில் உணவு விநியோக சேவையை தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக சோதித்து வருகிறது.
உணவு விநியோக இடத்தில் அமேசான் நுழைவது நாட்டில் உணவு விநியோக சந்தையில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள சோமாடோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும்.