ETV Bharat / lifestyle

பிட்காயின் மோசடிக்காக பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்த மூவர் கைது!

அமெரிக்காவின் பிரபலங்களான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர் பில் கேட்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட 130 பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்தது தொடர்பாக மூன்று இளைஞர்களை கைதுசெய்து இணையதள (சைபர்) புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

twitter hacked, ட்விட்டர் ஹேக்
twitter hacked
author img

By

Published : Aug 1, 2020, 1:02 PM IST

சான் பிரான்சிஸ்கோ: உலக பிரபலங்கள் முதல் சாமானியன் வரை அனைவரும் தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களை தெளிவாகவும், அதே நேரத்தில் சிறிதாகவும் பதிவிடும் தளமாக ட்விட்டர் இருந்துவருகிறது. அதனாலேயே அதீத பாதுகாப்பு அம்சங்களை உட்புகுதியிருந்தும் பிரபலங்களில் ட்விட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் விடுவதாக இல்லை.

அமெரிக்காவின் பிரபலங்களான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர் பில் கேட்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கும் ஜோ பிடன், ராப் பாடகர் கன்யே வெஸ்ட் உள்ளிட்டவர்களின் ட்விட்டர் கணக்குகள் ஜூலை மாத தொடக்கத்தில் ஹேக் செய்யப்பட்டன.

ஹேக்கில் சிக்கிய உலக தலைவர்களின் கணக்குகள்... மன்னிப்பு கோரிய ட்விட்டர்!

இந்த பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் அவ்வாறு சட்ட விரோதமாக நுழைந்த நபர்கள் அவற்றில் நன்கொடைகளை ‘பிட்காயின்’ வடிவத்தில் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தனர். இச்சூழலில் ட்விட்டர் கணக்குகள் சட்டவிரோதமாக ‘ஹேக்’ செய்யப்பட்டிருப்பதை அறிந்த உடனேயே, அதனைக் கட்டுப்படுத்த உடனடியாக அந்த நிறுவனத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ஹேக்கிங் ரஷ்யா அல்லது சீனாவால் நடத்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த விசாரணையில் பிரபலங்களை ஹேக் செய்து அதில் பிட்காய்ன் தொடர்பான தகவல்களை வெளியிட்டது 3 பேர் கொண்ட இளைஞர்கள் குழு எனத் தெரியவந்தது.

புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல் (22), இங்கிலாந்தைச் சேர்ந்த ஷேப்பர்டு (19) ஆகிய இருவரும் ட்விட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நபரான 17 வயது நிரம்பிய சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டுள்ளார் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

விஐபிக்கள் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த பிட்காயின் கும்பல்

கிராகாம் கிளார் என்ற பெயருடைய அச்சிறுவன் தான் இந்த மிகப்பெரிய ஹேக்கிங்கின் முக்கிய காரணம் என தெரியவந்ததையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ட்விட்டர் ஹேக்கிங்கில் கிலார் குறைந்தது ஒரு லட்சம் டாலர்கள் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக சைபர் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.