ETV Bharat / lifestyle

வார்த்தைகள் இல்லை ஒளி பேசும்... உலக புகைப்பட தினம்!

நினைவுகள் அனைத்தையும் ஒரு புகைப்படத்தில் அடக்கிட முடியும், காரணம் ஒளி வார்த்தைகள் இல்லாமல் பேசக்கூடியவை. ஒரு புகைப்படம் ஆயிரம் கதை சொல்லும், கதைகள் அனைத்தும் நிஜமானவை, அதனை கொண்டாடுவோம் உலக புகைப்படத் தினம் இன்று...

World Photography Day
author img

By

Published : Aug 19, 2019, 6:37 PM IST

உலகமே கொண்டாடும் புகைகபடத் தினம் இன்று, முதன் முதலாக புகைப்படம் என்று உருவானது 13ஆம் நூற்றாண்டில். உலகிலேயே முதலில் எடுக்கப்பட்ட புகைப்படம் எட்டு மணி நேரத்திற்கு பிறகு மறைந்து போனது. அதன் பிறகு கண்ணாடி பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார் சர் ஜான் ஹெர்செல், இவரே அதற்கு போட்டோரகிரேபி என்று பெயர் வைத்தவர்.

உலக புகைப்பட தினம்
உலக புகைப்பட தினம்

புகைப்படத்திற்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் பெருமை சேர்க்கவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 19ஆம் தேதி புகைப்படத் தினம் கொண்டாடப்படுகிறது, அதிலும் 180ஆவது வருடத்தை கடந்துள்ளது இப்புகைப்படத் தினம். ஒரு புகைப்படம் ஆயிரம் கதை சொல்லும் என்பதில் சந்தேகமில்லை, அவை கூறும் அனைத்து கதையும் உண்மையானவை. பல நினைவுகள் ஒரே புகைப்படத்தில் அடங்கும், வருடங்கள் பல கடந்தாலும் புகைப்படத்தில் உள்ள நினைவுகள் என்றும் அழியாது.

புகைப்பட தினம்
புகைப்பட தினம்

போட்டோகிரேபிக்கு கிரேக்க மொழியில் 'ஒளியின் எழுத்து' என்று பெயர். உண்மையில் பல எழுத்துக்களை ஒன்றிணைப்பது தான் ஒரு புகைப்படம். எழுத்தில்லா வடிவம் நிறைந்தது புகைப்படம். மனித உறவுகள், இயற்கை, விலங்குகள், நிகழ்ச்சி நிகழ்வுகள், அரசியல் பயணங்கள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவையில் புகைப்படம் அதிகம் பேசும்.

புகைப்படக்காரர்
புகைப்படக்காரர்

பல வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம், தற்போது கையில் கிடைத்து அதனை பார்க்கும் போது நினைவுகள் பலவற்றை மின்னல் போல் வந்து மறையும், கண்ணீன் ஓரத்தில் ஈரம் எட்டி பார்க்கும். அனைவருக்கும் ஓர் ஆசை இருக்கும் சிறு வயது போட்டோ பார்க்க வேண்டும் என்று. போட்டோ கிடைத்துவிட்டால் அதனை பொக்கிஷத்தை விட பாதுகாப்பாக பார்த்துகொள்வோம். புகைப்படத்தை ஒருவர் மதிப்பது எப்போது? அப்புகைப்படம் நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் கிடைக்கும் போது, அப்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடில்லாமல் இருக்கும் போதே, அதனுடைய மதிப்பு உயர்கிறது.

புகைப்படகலைஞன்
புகைப்படகலைஞன்

புகைப்படத்திற்கும் உணர்வுண்டு, சில புகைகப்படம் பார்க்கும் போது கண் கலங்குகிறது, சிலவற்றை பார்க்கும் போது மகிழ்ச்சி நிறைகிறது, அற்கும் உணர்வு இருக்கிறது. புகைப்படக் கலைஞனுக்கு ஒரு புகைப்படம், அவன் எதிர்பார்த்தது போல் கிடைக்க எவ்வளவு முயற்சி வேண்டுமானாலும் எடுப்பான். புகைப்படத்திற்கு உயிர் கொடுப்பவன் அவன், அனைத்து நிகழ்வுகளையும் அழகாக காட்சிப்படுத்துபவன். வார்த்தைகளே இல்லாமல் ஒளியின் மூலம் செய்தி சொல்லுபவரே திறமையான கலைஞன் என்று கூறுவர். அவரை தான் இவ்வுலகமும் அங்கீகரிக்கும், புகைப்படக் கலைஞன் என ஏற்றுக்கொண்டு கொண்டாடும். செய்தியை எழுத்து வடிவத்திலும் கூறலாம், ஒளி வடிவத்திலும் எளிமையாக கொண்டு சேர்க்கலாம். அதையே இப்போதும், எப்போதும் புகைப்படக் கலைஞர்கள் மக்களுக்கு எளிமையாக சொல்லி வருகின்றனர், அதேபோல் அவர்களது புகைப்படத்தையும் உலகிற்கு முன் வைக்கின்றனர்.

கேமரா
கேமரா

பலரது நினைவுகளை அன்பு, மகிழ்ச்சி, கண்ணீர், கவலை, பாசம், உணர்வு, உறவு, அழுகை உள்ளிட்ட அனைத்தையும் ஒற்றை புகைப்படத்தில் ஒருசேர இணைக்க முடியும். அது வார்த்தைகளல்லா ஒளியினால் மட்டுமே முடியும். அதனை பெருமை சேர்க்கவே கொண்டாடப்படுகிறது உலக புகைப்பட தினம்...

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.