நன்றியுணர்வு, ஒரு சக்திவாய்ந்த உணர்ச்சியாக இருப்பதால், எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது; நேர்மறை ஆற்றல், சிறந்த தூக்கம், நம்பிக்கை, விழிப்புணர்வு.
ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பில் 'உலக நன்றியுணர்வு தினம்' விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1965ஆம் ஆண்டில் ஹவாயில் உள்ள ஐக்கிய நாடுகளின் கட்டடத்தின் தியான மையத்தில், ஒரு நன்றி விருந்து நடைபெற்றது. அங்கு, தியான ஆசிரியரும் ஐ.நா. தியானக் குழுவின் இயக்குநருமான ஸ்ரீ சிம்னோய், உலகெங்கிலும் உள்ள மக்களை நன்றியுடன் ஒன்றிணைக்க ஒரு சிறப்பு விடுமுறையை உருவாக்க பரிந்துரைத்தார்.
வருகை தந்த மக்கள் ஒவ்வொருவரும் செப்டம்பர் 21ஆம் தேதி, தங்கள் நாட்டில் ஒரு நன்றிக் கூட்டத்தை நடத்துவதாக உறுதியளித்தனர். 1977ஆம் ஆண்டில் தான், ஸ்ரீ சிம்னாயின் பணியை அங்கீகரிக்கும் விதமாக, ஐ.நா. தியானக் குழு உலக நன்றியுணர்வு தினத்தை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான தீர்மானத்தை கோரியது. அப்போதிருந்து, உலக நன்றியுணர்வு தினம் ஆண்டுதோறும் சர்வதேச தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தற்கால சூழலில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளவர்கள்...
சுகாதார முன்களப் பணியாளர்கள்
இந்தியாவில் கரோனாவை எதிர்த்துப் போராட 1.2 கோடிக்கும் அதிகமான முன்களப் பணியாளர்கள் உள்ளனர். இதில் 196க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், செவிலியரும் கரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதில் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இன்னும் அவர்கள் முன்னணியில் அயராது உழைத்து வருகிறார்கள். அவை நம் அனைவருக்கும் உத்வேகம் தருகின்றன. இது தவிர, பல பொது மக்களும் நம் சமூகத்திற்கு வேறு பல வழிகளில் சேவை செய்கிறார்கள். எனவே, அவர்களுக்கு நாம் நன்றியைத் தெரிவிக்கும் நாள் இது.
ஆசிரியர்கள்
உலகில் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்கான வகுப்புத் தொடர்கிறது. போர் வீரர்களாக மாறி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பும் அளப்பரியது.
இந்த நன்றியுணர்வு நாளில் உலகளாவிய கரோனா கால வீரர்களுக்கு ஈடிவி பாரத் சார்பில் நன்றி கலந்த வணக்கத்தை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளோம்.