ETV Bharat / lifestyle

கொற்கை அகழாய்வு - 9 அடுக்கு சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு! - சுடுமண் குழாய்

கொற்கை அகழாய்வில் 9 அடுக்கு சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

tuticorin korkai excavation, கொற்கை அகழாய்வு
tuticorin korkai excavation
author img

By

Published : Jul 28, 2021, 7:01 AM IST

தூத்துக்குடி: தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வு பணிகள், பிப்ரவரி 26ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கொற்கையில், கடந்த 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் ஏற்கனவே அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. அந்த அகழாய்வுப் பணிதான், மாநில தொல்லியல்துறை உருவான பின்னர், செய்த முதல் அகழாய்வு பணியாகும்.

2,800 ஆண்டுகள் பழமை

சுமார் 2,800 ஆண்டுகள் பழமையானது கொற்கை நகரம் என்பது அந்த அகழாய்வில் உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்தாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடந்ததாகவும், ’கொற்கை’ பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் விளங்கியது எனவும் அறிவிக்கப்பட்டது.

இங்கு 52 ஆண்டுகள் கழித்து, தற்போது அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது. அகழாய்வு இயக்குநர் முனைவர் தங்கத்துரை தலைமையில், அகழாய்வாளர்கள் ஆசைத்தம்பி, காளீஸ்வரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோண்ட தோண்ட வரலாறு

இந்த அகழாய்வுப் பணிக்காக, கொற்கைப் பகுதியில் 17 ஆய்வுக்குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில் ஏற்கெனவே சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான கட்டடம், அறுக்கப்பட்ட நிலையில் சங்குகள், அறுக்கப்பட்ட சங்குகளை பட்டை தீட்டப் பயன்படுத்தப்பட்ட பல வடிகங்கள், சங்குகள், சங்கினால் செய்யப்பட்ட வளையல் துண்டுகள், இரும்பு உருக்குத் துண்டுகள், கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் பல்வேறு குறியீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற அகழாய்வில், 4 அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்களை வடிகட்டும் சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது ஆய்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதே குழியில் உருகிய கண்ணாடி மணிகள், இரும்புப் பொருள்கள் கடல் சிப்பிகள் கடல் உயிரினத்தின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு

இந்த நிலையில், நேற்று (ஜூலை 27) நடைபெற்ற அகழாய்வில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அகழ்வாராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இதனால், ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வைப் போலவே ‘கொற்கை அகழாய்வும்' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.