ETV Bharat / lifestyle

கடலில் நெகிழி இதைத்தான் செய்யும்: பாடம் சொல்லும் திமிங்கலம்! - கார்னிவல்

ரோம்: இத்தாலியில் நடைபெற்ற கேளிக்கை விழாவில், நெகிழி பயன்பாடு, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை பிரதிபலிக்கும் விதமாக பிரமாண்ட திமிங்கலம் ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.

திமிங்கலம்
author img

By

Published : Feb 25, 2019, 1:20 PM IST

இத்தாலியில் உள்ள ரோம் நகரத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் வியாரீஜியோ என்ற கேளிக்கை திருவிழா (viareggio carnival) இந்தாண்டு நேற்றைய தினம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரத்யேக தலைப்பைக் கொண்டு அதன் அடிப்படையில் 'தீம்' உருவாக்கப்பட்டு நடத்தப்படும் அந்த கேளிக்கை திருவிழாவில் இந்த ஆண்டு, நெகிழி எப்படி கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்த விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

பலரும் அந்த தலைப்புக்கு சம்மந்தப்பட்ட வகையில் வேடமிட்டு வந்திருந்தனர், அதில் குறிப்பாக ராபர்டோ வன்னுச்சி (Roberto Vannucci) என்ற கலைஞர் மிக பெரிய ஒரு மிதக்கும் திமிங்கலத்தை உருவாக்கி அந்த திருவிழா பேரணியில் காட்சிப்படுத்தினார். அவர் உருவாக்கிய அந்த திமிங்கலத்தைக் கொண்டு, நெகிழி எப்படி திமிங்கலங்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது என்பதை உணர்த்தும் வகையில் வடிவமைத்திருந்தார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்த திமிங்கல உருவ பொம்மைக்கு அவர் "அல்ட்டா மரியா" (Alta Marea) என்று பெயர் வைத்திருந்தார். இதுகுறித்து அவர் பேசியபோது, 'நாம் பயன்படுத்தும் நெகிழிகளை அதிகபட்சம் ஐந்து நிமிடமே உபயோகிக்கிறோம்; ஆனால் அவை இந்த பூமியில் பல ஆயிரம் ஆண்டுகள் தங்கிவிடுகின்றன. கடலில் இவை கலக்கும்போது, அவற்றை சிறிய மீன் என்று தவறாக நினைத்து உண்ண முயற்சிக்கும் திமிங்கலங்களின் வாயில் அவை சிக்கி அந்த திமிங்கலங்களின் உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது' என்று தெரிவித்தார்.

Intro:Body:

http://www.eenaduindia.com/news/international-news/2019/02/24232336/Italy-carnival-whale-highlights-issue-of-plastic-waste.vpf

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.