ETV Bharat / lifestyle

அயோத்தி ராமர் கோயில் தூண்கள் தர சோதனை நிறைவு!

author img

By

Published : Oct 29, 2020, 10:51 PM IST

அயோத்தி ராமர் கோயில் தூண்களின் தர சோதனை நிறைவு பெற்றது.

Ram Mandir Ayodhya  Ayodhya  final testing of pillars  Ram temple pillars  testing of Ram temple pillars  IIT Chennai  Larsen and Turbo  Final testing of Ram temple pillars  அயோத்தி ராமர் கோயில் தூண்கள் தர சோதனை நிறைவு  அயோத்தி ராமர் கோயில்  லார்சன் அண்ட் டர்போ  சென்னை ஐஐடி

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு பயன்படுத்த வேண்டிய தூண்கள் தர சோதனை நிறைவு பெற்றுள்ளது. சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் குழு ஒன்று 12 தூண்களை 700 டன் எடையை மேலிருந்து மற்றும் பக்கங்களில் வைத்து சோதனை செய்து அவைகளின் வலிமையையும் ஆயுளையும் சோதித்தது. தூண்கள் ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

அயோத்தியில் உள்ள பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்பட்டு, கோயிலின் அஸ்திவாரத்தைத் தோண்டி குறைந்தபட்சம் 1200 தூண்கள் மேற்பரப்பில் சுமார் 100 அடிக்கு கீழே போடப்படும். ராமர் கோயிலின் அஸ்திவாரம் பூகம்பத்தை எதிர்கொள்ள முடியுமா அல்லது வேறு ஏதேனும் இயற்கை பேரழிவை எதிர்கொள்ள முடியுமா என்பதை அறிய தூண்கள் சோதிக்கப்பட்டன.

பைலிங் செயல்முறை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. இந்தச் சோதனைகள் லார்சன் அண்ட் லார்சன் டர்போ மற்றும் சென்னை ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்டன. ஒரு மீட்டர் நீளம் கொண்ட சுமார் 12 தூண்கள் தரையில் இருந்து 100 அடி கீழே போடப்பட்டுள்ளன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும் நிர்வகிப்பதற்கும் ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அந்த வகையில் கோயிலின் அஸ்திவாரம் திடமாகவும், ஸ்திரமாகவும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்தப்படுகிறது.

ராமர் கோயில் கட்டுமானத்திற்கான கற்கள் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பன்சி பஹார்பூரின் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும். நிபுணர்களின் கூற்றுப்படி, பன்சி பஹார்பூரின் இளஞ்சிவப்பு கற்கள் மிகவும் உறுதியானதாக கருதப்படுகின்றன, மேலும் அவை 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயிலுக்கு 613 கிலோ எடை வெண்கல மணி: மதுரையில் உற்சாக வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.