பல்லாவரம் அடுத்த மன்சில் தெருவை சேர்ந்த சையத் என்பவரது வீட்டு துக்க நிகழ்விற்காக, காயல்பட்டினத்தை சேர்ந்த அவரது உறவினர் ஃபாத்திமா (68) வந்தார். நேற்றிரவு (நவம்பர் 2) வீட்டின் முதல் மாடியில் நின்று கொண்டிருந்த ஃபாத்திமா மீது, அங்கிருந்த மின் கம்பி எதிர்பாராத வகையில் உரசி மின்சாரம் பாய்ந்தது. பின்னர், பலத்த தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, ஃபாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், மின்துறையின் அலட்சியப் போக்கே ஃபாத்திமா உயிரிழக்க காரணம் என, அவரது உறவினர்கள் பல்லாவரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த தோமையார் மலை காவல் துணை ஆணையர் பிரபாகரன், மின்துறை அலுவலர்கள் ஆகியோர் ஃபாத்திமாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: திமுக ஒன்றிய செயலரின் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!