காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடச்சிவாக்கம் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக உத்திரமேரூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று தீவிர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டனர்.
அப்போது,அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஹரிஷ் (21) என்ற இளைஞரை காவலர்கள் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் தீவிர விசாரணையில், ஹரிஷ் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உத்திரமேரூர் காவல்துறையினர், ஹரிஷைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிருத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பம்மலில் கஞ்சா விற்பனை செய்த வட மாநில இளைஞர் கைது..!