ETV Bharat / jagte-raho

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவர் கைது!

தேனி: இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய இளைஞரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Nov 19, 2020, 4:16 PM IST

ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் வெங்கடேஷ்வரன் (26). இவர் அதே பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், தன்னை காதலித்து வந்த வெங்கடேஷ்வரன் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்ததையடுத்து, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வைகாசி மாதம் திருமணம் செய்து கொள்வதாக வெங்கடேஷ்வரன் மற்றும் அவரது பெற்றோர் உறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நிச்சயதார்த்தம் நடந்து ஓராண்டாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் வெங்கடேஷ்வரன் மறுத்து வருவதாகவும், எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இளம்பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வெங்கடேஷ்வரன், அவரது பெற்றோர் ராமச்சந்திரன், முனியம்மாள் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதில் வெங்கடேஷ்வரனை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டில் இருந்தவர்களைக் கட்டிப்போட்டு கத்திமுனையில் 60 சவரன் நகை கொள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.