ETV Bharat / jagte-raho

வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது - மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்த இளைஞரை மாவட்ட தனிப்படை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

author img

By

Published : Feb 9, 2021, 11:10 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்தால் அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு ரகசிய தகவலளிக்க வேண்டும் என்று பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் குமரன்கோவில் மேலத்தெருவில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று கஞ்சா வாங்குவதுபோல் நடித்து கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன்(25) என்ற இளைஞரை பிடித்தனர்.

அவரிடம் விசாரணை செய்ததில் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,700 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த ரூபாய் 3,400 பணத்தையும் பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உடனடியாக காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க:கலப்பட மருத்துவமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.