ETV Bharat / jagte-raho

கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த இளைஞர் கைது!

author img

By

Published : Oct 29, 2020, 10:45 PM IST

Updated : Oct 29, 2020, 10:52 PM IST

சென்னை: ஆவடி அருகே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

crime
crime

ஆவடியை அடுத்த வெள்ளானூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் விமலநாதன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக செடிகளை வண்டியில் கொண்டு வந்தார்.

அவரை இடைமறித்து சோதனை செய்ததில் அவரது பாக்கெட்டில் ஒரு கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த கஞ்சா செடிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில், கோவில்பதாகை ஏரிக்கரை ஓரமாக வளர்த்து வந்த அரை கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா செடி கொண்டு வந்த இளைஞர் வெள்ளானூர் நான்காவது தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ’7.5% இடஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும்’: பாமக ராமதாஸ்

Last Updated : Oct 29, 2020, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.