ETV Bharat / jagte-raho

பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞர்; காப்பாற்ற வந்தவர் படுகாயம்! - இளைஞர் கைது

சென்னை மாவட்டம் வேளச்சேரி நேரு நகர் பகுதியில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காக தட்டிக்கேட்ட கடை உரிமையாளரை தாக்கிய கஞ்சா போதை ஆசாமியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

காப்பாற்ற வந்தவர் படுகாயம்
காப்பாற்ற வந்தவர் படுகாயம்
author img

By

Published : Sep 30, 2020, 1:29 PM IST

சென்னை: கஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞரை தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

வேளச்சேரி நேரு நகர் பகுதியில் மளிகை கடை நடத்துபவர் குமாரசாமி. மளிகை கடைக்கு பொருள் வாங்க வந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதை கடை உரிமையாளரான குமாரசாமி தட்டிக் கேட்டுள்ளார். கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞர் கடை உரிமையாளரை நண்பர்களை அழைத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இந்நிலையில் கடை உரிமையாளரை கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயற்சித்துள்ளனர். மக்கள் பிடிக்க வருவதை கண்டு, கடை உரிமையாளரை தாக்கிய நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து ரெக்க ஜெய் என்கிற ஜெயக்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர்.

இதுகுறித்த விசாரணையில், ஜெயக்குமார் மீது வண்ணாரப்பேட்டை, மாதவரத்தில் திருட்டு வழக்கில் சிறை சென்று வந்தவர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜெயக்குமாருக்கு கஞ்சா கிடைத்தது எப்படி என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகார் கொடுத்தவுடன் துரிதமாக நடவடிக்கை எடுத்த வேளச்சேரி காவல் நிலைய காவலர்களுக்கு அடையாறு துணை ஆணையர் விக்கிரமன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபரை தட்டிக்கேட்ட கடை உரிமையாளரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதையும் படிங்க: வங்கியிலிருந்து ரூ.20 லட்சத்தை திருடிய 10 வயது சிறுவன்: காணொலி வைரல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.