ETV Bharat / jagte-raho

திருப்பத்தூர் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை: சார் ஆட்சியர் விசாரணை! - தற்கொலை செய்திகள்

திருப்பத்தூர் அருகே திருமணமாகி ஒரு வருடமான காலத்தில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

young girl commits suicide
young girl commits suicide
author img

By

Published : Nov 16, 2020, 8:22 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் மடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், இவரது மனைவி திரிஷா(20). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடமாகிறது. சமீபத்தில் ஆனந்தராஜ் வேலை தேடி சென்னை சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் குடும்பத் தகராறு காரணமாக திரிஷா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கணவர் வெளியூர் சென்ற நிலையில், திரிஷாவுடன் அவரது கணவர் வீட்டினர் யாரும் சரிவர பேசாத காரணத்தால், திரிஷா விஷமருந்தியதாக கூறப்படுகிறது.

திரிஷா அடிக்கடி வாந்தி எடுத்து மயங்கிய காரணத்தால், உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு திரிஷாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், விஷம் உடல் முழுவதும் பரவி விட்டது, இனி அவரை காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த உறவினர்கள், திரிஷாவை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனர். அங்கு உணவு உட்கொள்ள முடியாமல் இரண்டு நாட்கள் உயிருக்கு போராடிய திரிஷா, இன்று (நவ.16) பரிதாபமாக உயிரிழந்தார். அவரை உடனடியாக அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, திருப்பத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். திருமணமாகி ஒரு வருட காலத்தில் திரிஷா தற்கொலை செய்து கொண்டதால், சார் ஆட்சியர் முனீர் அஹ்மத் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் காவலர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.