ETV Bharat / jagte-raho

நேற்று திருடன்... இன்று திருடி... திருடர்களின் கூடாரமாகிறதா தென்மாவட்ட காவல்துறை? - திருட்டு போலீஸ்

காவலர் ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பணிபுரிந்த காவல்நிலையத்தில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதற்காக, பெண்காவலர் ஒருவர் கணவருடன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

women police arrested
women police arrested
author img

By

Published : Jan 1, 2021, 7:12 AM IST

திருநெல்வேலி: தென் மாவட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் திருடர்களாக மாறி வரும் அதிர்ச்சிகர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பகல்வேளையில் வீடுபுகுந்து திருட்டுவேலையில் ஈடுபட்டடதற்காக, காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது. பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதற்காக தன் கணவருடன் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவலரே திருடர்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் கற்குவேல், இவர் கொள்ளையர்களுடன் சேர்ந்து பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் நெல்லை காவல்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பணி ஓய்வில் இருந்த போது காவலர் கற்குவேல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த சம்பவத்தால் தமிழ்நாடு காவல் துறைக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து பல்வேறு வழக்குகளுக்காக காவல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிய சம்பவம் தென் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு வழக்குகளுக்காக கொண்டு வரப்பட்டு கூடங்குளம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய இருசக்கர வாகனங்கள் திருடு போகும் சம்பவம் அங்கு வாடிக்கையாக நடைபெற்றுள்ளது. இந்தநிலையில், கடந்த தீபாவளி அன்று வள்ளியூர் செண்பக ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரது இருசக்கர வாகனத்தை, வள்ளியூர் காவல் ஆய்வாளர் ஜெகதா விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளார். பின்னர் அந்த வாகனம், கூடங்குளம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வேலியே பயிரை மேய்ந்தது

விசாரணை முடிந்து, மதன்ராஜ் தனது இருசக்கர வாகனத்தை வாங்கச் சென்ற போது, அது திருடு போனவிட்டதாக காவலர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பலமுறை கேட்டும் அவருடைய இருசக்கர வாகனத்தை மீட்டுக்கொடுக்காமல், காவலர்கள் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மதன்ராஜ் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளார். காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், இருசக்கர வாகன திருட்டு விவகாரத்தில் கூடங்குளம் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, அதே காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் கிரேஹியா (29) தனது கணவருடன் சேர்ந்து புதிய இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிய வந்தது. கடந்த 10 மாதங்களாக தான் கிரேஸியா கூடங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு வாரத்தில் மூன்று நாட்கள் இரவு நேர பாரா டூட்டி வழங்கப்பட்டுள்ளது. அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், கிரேசியா, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த இருசக்கர வாகனங்களை தனது கணவர் மூலம் திருடி விற்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, இரவு பணியில் இருக்கும் போது, தனது கணவர் அன்புமணியை வரச்சொல்லி, விலை உயர்ந்த புது பைக்குகளை திருட வைத்துள்ளார். பிறகு இருவரும் சேர்ந்து அவற்றை பாதி விலைக்கு விற்று வந்துள்ளனர்.

கணவருடன் சேர்ந்து திருட்டு

திருட்டு சம்பவம் தொடர்பாக காவல் நிலைய வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, மதன்ராஜின் புது பல்ஸர்-150 வாகனத்தையும் அன்புமணி திருடியது தெரியவந்தது. இதனால் கிரேஸியாவும், அன்புமணியும் கையும் களவுமாக சிக்கி கொண்டனர். அதேபோல, காவல்நிலையத்தில் வைக்கப்படும் செல்போன்களையும் கிரேஸியா திருடியுள்ளார்.

இந்த தகவல்களை அறிந்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், பெண் காவலர் கிரேஸியாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் பெண் காவலர் மற்றும் அவரது கணவர் அன்புமணியை கூடங்குளம் காவல் ஆய்வாளர் அதிரடியாக கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு செல்போன், வெள்ளி அரைஞான் கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு காவலரும் சிக்குகிறார்?

இந்த சம்பவத்தில், கூடங்குளம் காவல் நிலைய எழுத்தர் திரவியத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மதன்ராஜின் இருசக்கர வாகனத்தை உடனே கொடுக்கும்படி ஆய்வாளர் ஜெகதா திரவியத்திடம் கூறியுள்ளார். அதனடிப்படையில் மதன்ராஜ் திரவியத்தைத் தொடர்பு கொண்ட போது அவர் சரிவர பதில் அளிக்கவில்லை கேட்கும் போதெல்லாம் நாளை பதில் சொல்கிறேன், நாளை மறுநாள் என்று இழுத்தடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மதன்ராஜ் தனது வழக்கறிஞருடன் சென்று முறையிட்டுள்ளார். பின்னர் பலமுறை மதன்ராஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது டிசம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் கொடு உனது இருசக்கர வாகனத்தை மீட்டு தருகிறேன் என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார் திரவியம்.

இதனால், இந்த திருட்டு சம்பவத்தில் திரவியத்திற்கும் தொடர்பு இருப்பதகாக அறியமுடிகிறது. எழுத்தர் திரவியம் உதவியுடன் தான் பெண் காவலர் கிரேஸியா திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். விசாரணைக்கு பிறகு எழுத்தர் திரவியமும் கைதாகலாம் என்றும் கூறப்படுகிறது

இதையும் படிங்க : கள்ளக்குறிச்சியில் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பலே திருடன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.