சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்தவர் திரேசா (52). இவர் நாமக்கல் அடுத்துள்ள எலச்சிபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக எலச்சிபாளையம் பேருந்து நிலையத்தில் நின்றார்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக திரேசா மீது மோதியது. இந்த விபத்தில் திரேசா லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிந்த எலச்சிபாளையம் காவல் துறையினர் லாரி ஓட்டுநரான ஜமீன் இளம்பிள்ளையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (22) என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: இரும்புத்திரை திரைப்படத்திற்காக பிரத்யேக பைக்கை உருவாக்கிய பைக் திருட்டு கும்பல்!