ETV Bharat / jagte-raho

கரோனா அச்சம்? - 'ஹார்பிக்' குடித்து பெண் அலுவலர் தற்கொலை! - பெண் தற்கொலை

சென்னை: பெண் தடயவியல் துறை அலுவலர் கழிவறை ஆசிட் குடித்து, தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தற்கொலையா என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

suicide
suicide
author img

By

Published : Aug 3, 2020, 3:47 PM IST

சென்னை வடபழனி கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், யுவராணி (49). இவர் தடயவியல் துறை அலுவலகத்தில் அறிவியல் துறை அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கழிவறையை சுத்தப்படுத்தும் 'ஹார்பிக்' திரவத்தைக் குடித்து, மயங்கிக் கிடந்த யுவராணியை, உறவினர்கள் மீட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் யுவராணியின் உடல்நிலை மோசமடையவே, மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று(ஆகஸ்ட் 3) காலை யுவராணி உயிரிழந்தார். இந்நிகழ்வு தொடர்பாக வடபழனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உடல் பருமனால் வேலைக்குச் சென்று வர மிகவும் அவதிப்பட்டு வந்த யுவராணி, தற்போதுள்ள கரோனா பரவல் நேரத்திலும், தினமும் அலுவலகம் சென்று வந்துள்ளார். அதிக உடல் எடை காரணமாக, கரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ எனக் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது, குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

கரோனா அச்சம்? - 'ஹார்பிக்' குடித்து பெண் அலுவலர் தற்கொலை!

குறிப்பு - தற்கொலை எண்ணங்களிலிருந்து மீள்வதற்கு 'சினேகா' என்ற தனியார் அமைப்பின் உதவி எண் '044 -2464 0060' எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு அரசின் உதவி எண் '104'க்கும் தொடர்பு கொண்டு பேசலாம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல...

இதையும் படிங்க: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.